சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் A THINKING MAN'S FILTER ஆகஸ்டு 22, 1965 மாலை பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா ஜெபம் செய்வோம். ஓ, தேவனே, இன்றிரவு உண்மையில் எங்கள் இருதயத்தின் வாஞ்சை அதுவே. "நம்ப மாத்திரம் செய்வது." இன்றிரவு இக்கூடாரத்தில் நாங்கள் ஒன்று கூடி, சூரியன் மேற்கில் 'அஸ்தமித்துக் கொண்டிருக்கும் போது, அன்புள்ள தேவனே, காலம் என்னும் சூரியனும் அஸ்தமிப்பதற்கு நேரம் மிக அருகாமையிலுள்ளது என்பதை நாங்கள் உணரும்படி செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறோம். காலம் விரைவில் சென்று கொண்டிருக்கிறது. பகல் சென்று போயிற்று. ஒரு முறை பகல் சென்று போன போது, இரு பிரயாணிகள் உம்மைத் தங்களுடன் தங்கும்படி கேட்டுக் கொண்டதை நினைவு கூருகிறோம். அப்பொழுது நீர் உம்முடைய வார்த்தையை விளக்கிக்காண்பித்து, கிறிஸ்து முதலில் பாடுபட வேண்டும் என்று அவர்கள் அறியும்படி செய்து, உம்மை அவர்களுக்கு வெளிப் படுத்தினீர். 2. எனவே தேவனே, பகல் இப்பொழுது சென்று போனதால், நீர் எங்கள் வீடுகளுக்குள் பிரவேசித்து, எங்களுடன் தங்கியிருந்து, நாங்கள் விலை உயர்ந்த பொக்கிஷமாக எங்கள் இருதயத்தில் கிருபையாகக் கொண்டுள்ள வார்த்தையை எங்களுக்கு விளக்கித் தரவேண்டுமென்று. ஜெபிக்கிறோம். நாங்கள் மிஞ்சிப் போக வேண்டாம். அதை எப்பொழுதும் எங்கள் இருதயங்களில் பயபக்தியுடன் கொண்டிருக்க அருள் புரியும். 3. இன்று காலை நீர் ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கும் சகோ. காப்ஸ் அவர்களின் சிறிய மகனுக்கும் செய்ததை நினைத்து உமக்கு நன்றி செலுத்துகிறோம். அந்த பையன் மரணத் தருவாயில் அங்கு படுத்திருந்தான். இப்பொழுது இன்றிரவு இக்கூட்டத்திற்கு வந்திருக்கிறான். பிதாவே, இவை அனைத்திற்காகவும் உமக்கு எவ்வளவாக நாங்கள் நன்றி செலுத்துகிறோம்-! 4. கர்த்தாவே, உமக்கு எப்படி நாங்கள் துதியைச் செலுத்த வேண்டுமென்று அறிந்துகொள்ள அருள்புரியும். உமக்கு எப்படி துதியைச் செலுத்த வேண்டும் என்று அறிந்து கொள்வதென்பது எங்கள் அறிவுக்கு எட்டாத ஒரு காரியம். ஆனால் கர்த்தாவே, எங்கள் இருதயங்களை, உம்மில் அன்பு கூருகிறோம். என்பதற்கு தோத்திரம் ஏறெடுக்கும் அடையாளங்களாக ஏற்றுக் கொள்வீராக. நாங்கள் சரியானதையே செய்ய விரும்புகிறோம் என்னும் போது, நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எங்களுக்குக் காண்பித்தருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென் (நீங்கள் உட்காரலாம்). 5, ஜன நெருக்கமுள்ள இந்த சபைக்கும், தொலைபேசியின் மூலம் நாடு முழுவதும் இணைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இன்றிரவு மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றிரவு அவர்கள் மறுபடியும் இணைக்கப் பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். என் மனைவி கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று நம்புகிறேன். அவளிடம் நான் தொலைபேசியில் பேசவில்லை. ஆராதனை முடிந்ததும் பேசலாமென்று எண்ணுகிறேன். 6. அந்நிலையிலிருந்த சகோ.ஜாக்ஸனின் சகோதரன் இல்லை தந்தையின் உடல் நிலையில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நாளை அவர் வீடு திரும்பலாம் என்றும் எழுதி அனுப்பியிருந்த குறிப்பு: இங்கு எங்களிடம் உள்ளது. எனவே நாம்..., 7. சகோ.காப்ஸ் அவர்களின் சிறு மகன்; அவர் என்னை அன்றொரு இரவு தொலைபேசியில் கூப்பிட்டு (சகோ. காப்ஸ் கூட்டத்தில் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத்தெரியவில்லை) அவருடைய மகன் மிகவும் வியாதிப்பட்டு இருப்பதாக கூறினார். நான் என் சிறு .22 துப்பாக்கியை ஆயத்தப்படுத்திக் கொண்டு, நானும் ஜோசப்பும் துப்பாக்கியை இலக்கு வைத்து சுடும் இடத் திற்கு (Shooting Range) சென்றிருந்தோம். அதைக் குறித்தெல்லாம் சென்ற வாரம் உங்களிடம் கூறினேன். அவன் உண்மையில் துப்பாக்கி சுடுவதில் சிறந்த-வனாக ஆவான், அவன் நன்றாக சுடுகிறான் என்று நான் உறுதி கொண்டேன், அதைப்பற்றி காரி (Gary), லாரி (Larry) இவர்களிடம் கூறவேண்டுமென்று அவன் விரும்பினான். நாங்கள் திரும்பி வந்து கொண்டிருந்த போது, நான், 'நீ இதைப்பற்றி சகோ. ஜீன் நார்மனிடமும் கூறவேண்டும்'' என்றேன். அவன், ''இதை முதலில் பில்லிக்கு (அவனுடைய சகோதரனுக்கு) அறிவிக்க வேண்டும்-?' என்றான். நாங்கள் பில்லியின் வீட்டுக்குச் சென்றோம். அங்கு. அவன் பில்லியிடம், அவன் எவ்வளவு பிரமாதமாக சுட்டான் என்று காண்பித்து விட்டு, 'இனிமேல் என் கிட்டே நீ வராதே," என்றான். பாருங்கள்-? 8. நாங்கள் அங்கு சென்ற போது தொலைபேசி மணி அடித்தது. தொலை பேசியை எடுக்க பில்லி ஒடினான். நான், ''ஒருக்கால் வியாதியஸ்தர்களுக்காக செய்யப்படும் தொலைபேசி அழைப்பாயிருக்கலாம்,” என்றேன். நாங்கள் அப்பொழுது தான் உள்ளே நுழைந்தோம். அது சகோ.காப்ஸ். அந்த சிறுவனுக்கு தொண்டை வியாதி இருந்தது, அவன் உயிர்வாழ எந்த வழியும் இல்லை. கர்த்தர் அவனைச் சுகமாக்கினார், அன்றொரு இரவு திருமதி உட் என்னிடம், அந்த பையன் ஏதோ ஒருவகையான வலியால் அவதியுறுவதாக கூறினார்கள். நான் அவர்களிடம், ''திருமதி உட். இப்பொழுது தாமதமாகி விட்டது. 10-மணி ஆகி விட்டது. என்னை ஆஸ்பத்திரிக்குள் அனுமதிப்பது சந்தேகம் தான். எனவே நான் வீடு சென்றதும் கதவை மூடி ஜெபிக்கப் போகிறேன்” என்றேன். நான் அவ்வாறே மேல் மாடிக்குச் சென்று ஜெபித்தேன். அந்த சிறுவன் இன்றிரவு கூட்டத்துக்கு வந்துள்ளதாக என்னிடம் கூறினார்கள். அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். 9. நாங்கள் காத்திருக்கிறோம், நாங்கள் இன்னும் கேள்விப்படவில்லை. சகோ. லியோ-மெர்ஸியரும், சகோதரி-மெர்ஸியரும் இதைக் கேட்டுக் கொண்டு இருப்பார்களானால், உங்கள் தந்தையிடம் இருந்து நாங்கள் எந்த விவகாரமும் கேள்விப்படவில்லை. அவர் உடல் நிலை எவ்வாறுள்ளதென்று இன்னும் சிறிது நேரத்தில் கேள்விப்படுவோமென நம்புகிறோம். அவர் சுகம் அடைந்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சர்வவல்லமையுள்ள தேவன் தாமே அந்த அருமையான, வயோதிப பரிசுத்தவானை - வெகு காலம் சுவிசேஷத்துக்குப் போதகராயிருந்த அவரை கவனித்துக் கொள்வார். 10. ஓ, செய்யப்பட வேண்டிய காரியம் அநேகம் உண்டு. அவைகளைச் செய்வதற்கோ குறைந்த நேரமே உள்ளது. எனவே நாம் கர்த்தருக்குச் செய்ய வேண்டிய காரியங்களை முழு முயற்சியுடன் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம், 11. நான் சிறிது நேரத்தோடே வந்து விட்டேன். எனக்கு அவ்வளவாக சுகம் தோன்றவில்லை. நான் மிகவும் களைப்படைந்து, இன்று பிற்பகல் படுக்கைக்கு சென்று விட்டேன். நான் இன்னும் பகல் உணவு அருந்தவில்லை. நான் பிற்பகல் முழுவதும் படுத்துக் கொண்டேயிருந்தேன். எனக்கு சுகம் தோன்றவில்லை. எனவே நான் படுத்துக் கொண்டிருந்தேன். நான் ஜெபித்த போது, சிறிது சுகம் தோன்றினது. நான் படுக்கையை விட்டு எழுந்து, உடைகளை அணிந்து, சபைக்கு வந்து விட்டேன். 12. நாம் தேசம் முழுவதுமுள்ள கிறிஸ்துவின் சரீரமாகிய அந்த பாகத்துடன் இணைய முயலும் இந்நேரத்தில், நாம் ஒருமித்து ஏறெடுக்கும் முயற்சிகளை கர்த்தராகிய இயேசு இன்றிரவு ஆசிர்வதித்து தருவாரென நம்புகிறோம். அவருடைய ஆடுகளைப் போஷிக்கும் உரிமை எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரையில், நான் சரியான ஆகாரம் என்று கருதுவதையே ஆடுகளுக்கு அளிப்பேன். நாம் எல்லோரும் ஓரிடத்தில் ஒன்று கூடி, ஏழு வாதைகள், ஏழு கலசங்கள், எக்காளங்கள் போன்றவைகளின் பேரில் பிரசங்கம் செய்யக் கூடிய தருணத்தை ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவையனைத்தும் ஒரு கொத்தாக அமைந்துள்ளன. நம்மால் கூடுமானால், ஒரே கூட்டத்தில் ஒரு வாரம் அல்லது "பத்து நாட்கள் எடுத்துக் கொண்டு அவைகளைப் பிரசங்கித்து விடலாம். அத்தனை நாட்கள் நமக்குப் போதும். 13, அநேகர் தொலைவிலிருந்து பயணம் செய்து இங்கு வந்திருக்கிறீர்கள். நான் சுற்றிலும் பார்த்த போது, சற்று முன்பு டூசானிலிருந்து வந்து உள்ளவர்களைக் கண்டேன், திருமதி.சாத்மன்... நான் சகோ.ஃப்ரட் அவர்களைக் காண்கிறேன், அவரைக் காலை கண்டேன். பின் பக்கத்தில் அவருக்கருகில் உட்கார்ந்திருப்பவர், கோ.டான்-ரட்டல் என்று நினைக்கிறேன். சகோ.டான், உங்களைக் காண்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஜூனியர் இங்குள்ளாரா அல்லது அவருடைய சபையில் இருக்கிறாரா-? அவர்களுடைய சபை இணைக்கப் பட்டுள்ளதென்று நம்புகிறேன் நீங்கள் அனைவரும்; இன்றிரவு நீங்கள் எங்களுடன் கூட இருப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். என்றாவது ஒரு நாள் நமது உலக வாழ்க்கை முடிந்து போய், மரணத்துக் குரிய இவ்வாழ்க்கையின் சிறு வெளிச்சம் மங்கி அணையும் போது, நாம் பொல்லாப்புக்குப் பயப்படோம். அதற்காக நாம் கர்த்தரை நம்பியிருக்கிறோம். 14. இப்பொழுது தான் எனக்கு அரிசோனா 19 குந்தி-பிரஸ்காட்டிலிருந்து செய்தி கிடைத்தது; சகோ.அ.கின்ஸ் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து விட்டாராம். அதற்காக நாம் நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம். நல்லது. அது மிகவும் நல்லது. சகோதரி.மெர்ஸியர், உங்கள் தந்தை இப்பொழுது சுகமாகிக் கொண்டு வருகிறார். நாம் ஜெபம் பண்ணி முடித்த பின்பு, அவர் சுகமடைவார் என்பதை உணர்ந்தேன். எனவே... அவர்களும் நம்முடன் தொலைபேசியில் இணைக்கப் பட்டிருக்கக் கூடும். அவர்கள் இணைக்கப்பட்டிருப்பார்களென நம்புகிறேன். அவர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனவே நமது சகோதரன் சுகமடைந்து வருகிறார், அவர் சுகமடைய போகின்றார் என்பதைக் குறித்து நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இவையனைத்திற்காகவும் நாங்கள் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். 15. நேற்று இரவு ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டது, இங்குள்ள ஒரு அருமை சகோதரன்... இன்று நம்முடன் அவர் இல்லை என்று எண்ணுகிறேன். கென்டக்கியிலிருந்து வந்துள்ள அந்த சகோதரன் அவருடைய மகளைக் குறித்து என்னை அணுகினார். அருமையான குடும்பம், அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடக்கப்போகின்றது. அவள் வாலிப கர்ப்பிணி. அவளுக்கு முதுகில் புற்றுநோய் உள்ளது. தேவன் தாமே இந்த வாலிபப் பெண்ணை விடுவிக்குமாறு நாம் ஜெபிப்போம். அவர் விடுவிப்பாரென்று விசுவாசிக்கி-றேன். சபையோர் அனைவரும் ஒருமித்து அந்த ஜனங்களுக்காக ஜெபிப்-பார்களானால். அதை தாம், நாம் ஒரு குழுவாக செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். 16. நாட்கள் நெருங்க நெருங்க, பாதை குறுகி வருந்தோறும் நாமும்கூட ஒருவருக்கொருவர் நெருங்கி வரவேண்டும், என்னே, நாம் ஒரே சரீரமாக ஆக வேண்டும், ஒருவருடைய பாவங்களையும் கருத்து, வேறுபாடு களையும் மற்றவர் மறந்தவர்களாய் ஒன்றாக அசைந்து ஒருவருக்கு ஓருவர் நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்து, அந்த நாள் சமீபித்து வருவதை நாம் காணும் போது, நாம் ஏகசிந்தையும் ஏக மனதும் கொண்டவர்களாய் சபை கூடிவர் வேண்டும். ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ எந்த வகையிலாவது பாதையை விட்டு விலகினால் அந்த நபருக்காக ஜெபம் செய்வதேயன்றி வேறொன்றும் செய்யாதிருங்கள். அன்பினால் ஒருவரையொருவர் எப்பொழுதும் தாங்குங்கள், உங்களில் ஒருவராவது உங்களை விட்டு விலகிச் செல்ல அனுமதிக்க வேண்டாம். நீங்கள் ஒன்றாக இருங்கள், கூடுமானால் உங்கள் எண்ணிக்கையை எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டேயிருங்கள். 17. சகோ. நெவில், சகோ.ரைட்டைக் குறித்த உங்கள் வேண்டுகோள் எனக்குக் கிடைத்தது. சகோ.ஜார்ஜ்-ரைட் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சகோ.ரைட்டும் இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. சிறு ஈடித், நான்... ஒரு நாள் நாங்கள் வரும் போது, ஒரு ஞாபகார்த்தக் கூட்டம் வைக்க விரும்புகிறோம். ஈடித்துக்காக நான் வரவில்லை. அவள் மரித்த போது : சகோதரி ரைட், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவள் கண்ட சொப்பனம் உங்களுக்கு நினைவிருக்கிறதா-? அப்பொழுது நான் ஈடித் அதிக காலம் நம்முடன் இருக்கமாட்டாளென்று உங்களிடம் கூறினேன். ஏனெனில் கர்த்தர் ஏற்கனவே அவள் கண்ட சொப்பனத்தின் மூலமாக அதை அறிவித்து விட்டார். அவள் கண்ட சொப்பனத்தின் அர்த்தம் என்னவெனில், அவள் தேவனைச் சந்திக்கப் போகிறாள் என்பதே. 2-ஆண்டுகள் கழித்து அவள் தேவனைச் சந்திக்கச் சென்று, அவள் தந்தையும் தாயும் அழிவுக்கும் அழியாமைக்கும் இடையேயுள்ள பிரிவினைக் கோட்டைக் கடப்பதற்காக இப்பொழுது காத்துக் கொண்டிருக்கிறாள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக-! கூடுமானால் உங்களை உடனடியாக சந்திக்க விரும்புகிறேன். தேவன் உங்ளோடு கூட இருப்பாராக-! 18. ஷெல்பியும் மற்றவர்களும்... இன்று காலை ஷெல்பியைக் கண்டதாக நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. இங்கிருந்து நன்றாக காண முடியவில்லை. கூரை இப்படி இறங்கியுள்ளதால், அது வெளிச்சம் உண்டாக்குகிறது. ஜனங்களைப் புள்ளிகள் போல் காண முடிகிறது. அவர்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. 19. இப்பொழுது செய்திக்கு நேரடியாக வருவோம். இந்த செய்திக்காக நான் எண்ணாகமம்.19:9-ஐயும், எபேசியா.5:26-ஐயும் படிக்க விரும்புகிறேன். வேத வாக்கியங்களை எழுதி வைக்கும் வழக்கமுள்ளவர்கள். இப்பொழுது குறித்துக் கொள்ளலாம். 20. கவனியுங்கள். இது ஒலி நாடாவில் பதிவு செய்யப்படுகிறதென்றால், எனக்குத் தெரியவில்லை, பதிவு செய்பவர் யாரையும் நான் காணவில்லை. ஆம், நான் காண்கிறேன், பதிவு அறையில் நான் சகோ.டெர்ரியைக் காண்கிறேன். இது பதிவு செய்யப்படுகிறதென்றால், எல்லாவிடங்களிலும் உள்ள போதகர்களுக்கு இதை கூற விரும்புகிறேன். உங்கள் உபதேசங்களுக்கு அவமதிப்பை உண்டாக்க வேண்டுமெனும் நோக்கத்துடன் இது அளிக்கப் படுவதில்ல. இது உங்கள் ஆடுகளுக்கு அளிக்கப்படும் செய்தியும் அல்ல. நான் பேசுகின்ற இந்த செய்தியும் மற்றெல்லா செய்திகளும், என் சபையோருக்காக அளிக்கப்படுபவையே. அது உங்கள் சபையோருக்கு அல்ல. அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினாலொழிய, இது இங்குள்ள ஜனங்களுக்கு அளிக்கப்படு-வதாகும். 21. ஜனங்கள் இந்த செய்திகளடங்கிய ஒலி நாடாக்களை வாங்குகின்றனர். உலகம் முழுவதிலுமுள்ள ஜனங்கள் இவைகளை வாங்கி, இந்த செய்திகளைக் கேட்கின்றனர். அநேக முறை அவர்கள் எனக்கு கடிதம் எழுதுகின்றனர். அவர்கள் ஏதாவதொரு சபையின் அங்கத்தினராயிருக்க நேரிட்டால், அவர்களுக்கு, உங்கள் போதகரைக் காணுங்கள்” என்று அவர்களுடைய போதகரிடம் அனுப்புகிறேன். 22 இப்பொழுது, போதகரே, இதை நீங்கள் அறிய விரும்புகிறேன், இவைகளை என் சபையோருக்கு மாத்திரமே பேசுகிறேன், அப்படி செய்ய எனக்கு உரிமை எண்டு. ஏனெனில் இந்த ஆடுகளைக் கண்காணிக்க பரிசுத்த ஆவியானவர் என்னை நியமித்திருக்கிறார். நான் சத்தியம் என்று கருதுபவைகளை அவர்களுக்கு எடுத்துரைக்காமல் போனால், எனக்கு ஐயோ-! அது எங்கிருந்து வருகிறது என்று நானறிவேன், ஆனால் அது உலகத்திற்கோ அல்லது மற்ற சபைகளுக்கோ அல்ல. தேவன் உங்களிடம் என்ன செய்யக் கூறுகிறாரோ, அதைச் செய்யுங்கள். உங்களுக்காக நான் பதிலுரைக்க முடியாது. அவ்வாறே எனக்காக நீங்களும் பதிலுரைக்க முடியாது. ஆனால் நாம் ஒவ்வொருவரும் நமது ஊழியத்துக்காக தேவனுக்கு முன்பாக கணக்கொப்புவிக்க வேண்டும். எனவே என் ஊழியத்துக்காக நான் கணக்கொப்புவிக்க வேண்டுமானால், நான் புரிந்து கொண்ட விதமாக, எனக்கு வெளிப்படுத்தப்பட்ட விதமாக, அதை நான் பிரசங்கிக்கவேண்டும், அது இப்பொழுது அறிந்து கொள்ளப்படட்டும். 23. எனவே, எண்ணாகமம்.19:9ல் அடங்கியுள்ள பொருளை, இல்லை, வேத வாக்கியத்தை நாம் படிப்போம்: 'சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக் கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக் கடவன்; அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காக ... (இப்பொழுது கவனியுங்கள்!) .... தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று (for a water of separation) காத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்" எண். 19: 9 24. கவனியுங்கள், அது எல்லோருக்கும் அல்ல. அந்த தீட்டுக் கழிக்கும் ஜலம் இஸ்ரவேல் புத்திரரின் சபைக்கு மாத்திரமே. இப்பொழுது எபேசியர் 5-ம் அதிகாரம், 22-ம் வசனம் தொடங்கி: ''மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்தப் புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாய் இருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது போல, மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்தி லேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்பு கூர்ந்து, (இதை நான் இப்பொழுது கூற விரும்புகிறேன்). தாம் அதை திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து பரிசுத்தமாக்குகிறதற்கும் (cleanse it with the washing of the water by the word) எபே.5:22-26 25. இன்றிரவுக்கான பொருள் - அதை நான் பொருள் என்று அழைக்கக் கூடுமானால்... இங்குள்ள ஜனங்களும் தொலைபேசியில் இணைக்கப்பட்டு உள்ளவர்களும், இதை பரிசுத்த குலைச்சலாக எண்ண வேண்டாம்... இப்படிப்பட்ட ஒரு பொருளைத் தெரிந்து கொள்ளுதல் என்பது பரிசுத்த குலைச்சலாகத் தோன்ற வழியுண்டு, இன்றிரவு நான் உபயோகிக்கப்போகும் பொருள்: "சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்' என்பதாகும். புகை பிடித்தலுக்கு விரோதமாயுள்ள ஒரு போதகர் இப்படிப்பட்ட ஒரு பொருளைத் தெரிந்து கொள்வது தீவிரமான செயலாகத் தோன்றக் கூடும். சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்" 26. அன்றொரு நாள் காலை நான் அணில் வேட்டைக்குச் சென்றிருந்த போது, இது நடந்த்து... என் பொருளை நான் அறிவித்தபோது, இங்கு கூடியுள்ள சபையோரின் முகத்தோற்றத்தை வானொலி அல்லது தொலைபேசி மூலம் இணைக்கப்பட்டவர்களாகிய நீங்கள் கண்டிருக்கக் கூடுமானால், அதைப் பார்த்து நீங்கள் சிரித்திருப்பீர்கள் - சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்'' 27. ஒரு நாள் காலை கர்த்தருடைய தூதர்கள் எனக்குப் பிரத்தியட்சமான இடத்தில் இது நடந்தது. அணில்கள் பேசி சிருஷ்டிக்கப்பட்டன. அது எப்பொழுது நடந்ததென்று உங்கள் எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். ஏழு சபை காலங்களைக் குறித்து நான் பிரசங்கிப்பதற்கு சற்று முன்பு, நான் மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தேன். பொழுது விடிவதற்கு முன்பு ஒரு காலையில் நான் வேட்டைக்காக சென்றிருந்தேன். சூரியன் எழும்பி வருகிறதென்று நான் எண்ணினேன். அப்பொழுது காலை சுமார் 4.00 மணி இருக்கும். அது விசித்திரமாக இருந்தது. அந்த ஒளியை நான் கண்டேன். நான் திரும்பிப் பார்த்த போது, மலையின் உச்சியில் ஏழு குத்து விளக்குகள் நின்று கொண்டிருந்தன. வானவில் போன்ற ஒன்று குத்து விளக்குகளை இணைக்கும் குழாயின் வழியாகப் பாய்ந்து அவைகளுக்கு எண்ணெய் தந்து கொண்டு இருந்தது. 28. இது சம்பவித்த உடனே, கர்த்தராகிய இயேசு எங்க ளுக்கு பிரத்தியட்சமானார். அப்பொழுது ஒரு சத்தம், ''பழைய ஏற்பாட்டின் யேகோவாவே புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்து'' என்றுரைப்பதை நான் கேட்டேன். அந்த ஏழு குத்து விளக்குகளுக்கு சற்று பிறகு அதோ அவர் வெளிப்பட்டார், இதை கவனியுங்கள், எத்தனை பேருக்கு அந்த பொருள் ஞாபக முள்ளது? அதை என் ஜேபியிலிருந்த தோட்டாக்களைக் கொண்ட பெட்டியின் பின்பாகத்தில் நான் எழுதி வைத்தேன். "பழைய ஏற்பாட்டின் யேகோவாவே புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்து.' பரலோகத்தின் தேவன் அது உண்மையென்பதை அறிவார். 29. அந்த அணில்களின் சம்பவம் நடந்த போது அவர் எனக்கு பிரத்தியட்சமான இடத்தை நான் கடந்து சென்றேன். 30. இதற்கு பின்பு சில மாதங்கள் கழித்து, என் நல் நண்பர் ஜாக்மூர் அவர்களைக் கேட்பதற்காக நான் அவரிடம் சென்றிருந்த போது, நான் ஏழு சபை காலங்களைக் குறித்து பிரசங்கிக்கத் தொடங்கின சமயம் அது. வெளிப்படுத்தல் 1-ம் அதிகாரம்... அவர் முழுவதும் வெண்மையுள்ளவராய் அங்கு நின்று கொண்டிருந்தார், அவருடைய சிரசின் மயிர் ஆட்டு ரோமத்தைப் போலிருந்தது. எப்படி முப்பத்து மூன்று வயது கொண்ட அவர் முழுவதும் வெண்மையாக இருக்க முடியும்-? சகோ.மூர் மிகவும் அருமையான, நாகரீகமுள்ள சீரிய பண்புகள் கொண்ட கிறிஸ்தவர். அவர் ஒரு அறிவாளியும் கூட - நான் அறிந்த மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவர். அவர், ''சகோ. பிரான்ஹாமே. அது இயேசு, தாம் 'மகிமையடைந்த பின்பு உள்ள நிலை. அப்படித் தான் இப்பொழுது அவர் காணப்படுகிறார்' என்றார். 31. ஆனால் அது சரியென்று எனக்குப் படவில்லை. அதைக் குறித்து நான் ஜெபித்துக் கொண்டே வந்தேன். ஒரு நாள், நான் ஏழு சபை காலங்கள் பிரசங்கிக்கத் துவங்குவதற்கு முன்பு; வெளிப்படுத்தல் முதலாம் அதிகாரம் எனக்கு சரியாகப் புரியவில்லை. எப்படி அதே சரீரத்தில் உயிர்த்தெழுந்த முப்பத்து மூன்று வயதுடைய ஒரு மனிதன்... அப்போஸ்தலர்கள் அவர் யாரென்பதை அடையாளம் கண்டு கொண்டனர்... எப்படி அவர் எண்பது அல்லது தொண்ணூறு வயது நிரம்பிய ஒருவரைப் போல், முகம் முழுவதும் வெள்ளை ஆட்டு ரோமம் போன்ற மயிரைக் கொண்டவராய், அவருடைய தாடி உறைந்த மழையைப் போல் வெண்மையாயிருக்க முடியும்-? 32. நான் தானியேலின் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அதில் அவர் நீண்ட ஆயுசுள்ளவர் சமீபத்தில் கொண்டு வரப்பட்டார். அவருடைய தலைமயிர் ஆட்டு ரோமம் போல் வெண்மையாயிருந்தது. நான் நீண்ட ஆயுசுள்ளவரைக் கண்ட போது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற நீண்ட ஆயுசுள்ளவர். அது ஒரு அடையாளம் என்பதை அறிந்து கொண்டேன். அப்படியானால் அந்த வெள்ளை ஆட்டு ரோமம் எதற்கு-? அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், நான் முன்பு ஒரு முறை கண்ட பழைய காலத்து நீதிபதியின் படத்தை எனக்கு ஞாபகமூட்டினார். நான் அதைக் கண்டு பிடிக்க வேதாகம சரித்திரத்துக்கு சென்று ஆராய்ந்தேன், பழைய காலத்து நீதிபதிகள் இஸ்ரவேலரின் பிரதான ஆசாரியனைப் போன்று. ஆட்டு ரோமம் போன்ற வெண்மையான தலைமயிரையும் தாடியையும் அணிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் அணிந்துள்ள அந்த வெள்ளை, இஸ்ரவேலின் நியாயாதி- பதிகளில் அவர் பிரதான அதிகாரம் வகிப்பவர் என்பதற்கு எடுத்துக் காட்டாய் அமைந்துள்ளது. இன்றைக்கும் கூட, சுமார் 200-ஆண்டுகள் முன்பு வரைக்கும் அல்லது அதற்கும் குறைவாக இருக்கக்கூடும் - இங்கிலாந்திலுள்ள நீதிபதிகள், அவர்கள் வாலிபராயிருந்தாலும், வயோதிபராயிருந்தாலும் சரி; அவர்கள் தீர்ப்புக் கூறச் செல்லும் போது அந்த ராஜ்யத்தில் அவர்களுடைய வார்த்தைக்கு மிஞ்சின அதிகாரம் எதுவுமில்லை என்றும், அவர்களுடைய வார்த்தையே அந்த ராஜ்யத்தில் முடிவானது என்றும் காண்பிக்க, ஒரு வெள்ளை தலையங்கியை (wig) அணிவது வழக்கம். அவர்கள் என்ன கூறுகின்றனரோ, அதுவே முடிவானது. 33.. அவர் வாலிபனாயிருந்த போதிலும், வெள்ளை தலையங்கி அணிந்து அங்கு நிற்பதை நான் கண்டேன். அவரே பிரதான அதிகாரம் படைத்தவர். அவர் வெள்ளை தலையங்கியை அணிந்து கொண்டிருக்கிறார், 34. பிறகு நாங்கள் அந்த பிரசங்கத்தை முடித்துக் கொண்டு மேற்கு பாகத்துக்குச் சென்ற போது, கர்த்தருடைய தூதர்கள் அந்த ஏழு முத்திரைகளுக்காக பிரத்தியட்சமாயினர். அது மேலே வாயு மண்டலத்துக்கு சென்றது (அதன் புகைப்படம் இங்கு நம்மிடையேயும், தேசம் பூராவும் உள்ளது). அவர் இன்னும் தலையங்கி அணிந்தவராய் பிரதான அதிகாரத்துடன் அங்கு நின்று கொண்டிருந்தார். அவரே சபைக்குத் தலை. அவர் சரீரத்துக்கு தலை. அவரைப் போன்று எதுவும் வெறெங்கும் இல்லை. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. அவர் சகலத்தையும் தமக்கென்று உண்டாக்கினார். உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. வானத்திலும் பூமியிலும் சகல் அதிகாரத்தையும் அவர் பெற்றிருக்கிறார். எல்லாம் அவருக்கு சொந்தம், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாய் இருக்கிறது. அந்த வார்த்தை மீட்பின் திட்டத்தின் இரகசியம் அனைத்தையும் எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் ஞானிகளுக்கும் வெளிப்படுத்திக் கொடுத்தவர் அவரே. அவர் மாத்திரமே வெள்ளை தலையங்கி அணிந்து பிரதான அதிகாரம் கொண்டவராயிருக்கிறார். 35. அன்றொரு நாள் காலை நான் மலையின் மேல் சற்று நின்றேன். அங்கு சில அணில்கள் இருந்தது போல் தோன்றினது. நான் அங்கு உட்கார்ந்தேன். சிறிது நேரத்துக்குள் எனக்கருகிலிருந்த புதர் அசையத் தொடங்கினது. அப்பொழுது பெரிய உருவம் படைத்த ஒருவன் 2-குழாய் துப்பாக்கியுடன் புதர்களின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் நான் பயந்து போனேன். நான் சற்று அப்பால் சென்று உட்கார்ந்து கொண்டேன். அவன் எங்கே என்னை சுட்டுவிடுவானோ என்று பயந்து. நான் அசையாமல் ஓரிடத்திலேயே இருந்தேன். புதர்கள் அசைந்தன. நான் அமைதி- யாய் உட்கார்ந்திருந்தேன். 36. ஓரு அணில், மலையின் மேல் ஓடத் தொடங்கினது. அவன் இரண்டு குழாய்களின் வழியாகவும் அதை சுட்டான், அவன் குறி தவறினது. எனவே அணில் மலையின் கீழே ஒடினது. நான், இப்பொழுது நகர்ந்து சென்று விடுவேன். சத்தம் பயங்கரமாக எதிரொலிக்கிறது. அவனுடைய துப்பாக்கியில் உள்ள தோட்டாக்கள் தீர்ந்து விட்டன'' என்று எண்ணி, மலையிலிருந்து கீழே நடக்கத் தொடங்கினேன். அப்பொழுது அவன் சரியாக எனக்கு முன்னால் சுட்டான். அதைக் கண்டதும் நான் இந்த வழியாக திரும்பி சென்ற போது, .23 துப்பாக்கி சுடத்தொடங்கினது. தோட்டாக்கள் என் தலைக்கு மேல் பறந்து சென்றன. "ஐயோ. நான் பயங்கரமான இடத்துக்கு வந்து விட்டேனே,'' என்று எண்ணினேன். 37. எனவே நான் திரும்பிச் சென்று. ஆற்றங்கரையை அடைந்தேன். அவர்கள் சுட்டு முடியும் வரைக்கும் நான் இங்கேயே ஒளிந்து கொண்டிருந்தது. பின்பு இங்கிருந்து சென்று விடுவேன்,'' என்று நினைத்தேன். நான் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது. வலது பக்கம் பார்க்கும்படியாக என் கவனம் கவரப்பட்டது. நான் பார்த்த போது. ஒரு காலி சிகரெட் பாக்கெட் அங்கே கிடந்தது. யாரோ ஒருவர் அணில்களை புதர்களின் வழியாக துரத்திச் செல்லும் போது அதை கீழே போட்டு விட்டு சென்றிருப்பார். 38. நான் அந்த சிகரெட் பாக்கெட்டை கையிலெடுத்து நோக்கினேன். அதை நான் கையிலெடுக்கவில்லை. என்னை மன்னிக்கவும், அதை நான் குனிந்து பார்த்தேன். அதைக் கையிலெடுக்கவில்லை. ஏனெனில் முதலாவதாக அதன் மணம் எனக்குப் பிடிக்காது. நான் குனிந்து பார்த்த போது, ஒரு குறிப்பிட்ட புகையிலை நிறுவனத்தினர்; அவர்களின் பெயரை நான் சொல்லக்கூடாது. அது உங்களுக்குத் தெரிந்திருக்கும், "சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளும், புகை பிடிக்கும் மனிதனின் ருசியும்" என்று அதன் மேல் அச்சடித்திருந்தனர். அதை நான் பார்த்தேன். 'சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளா-?'' என்று வியந்தேன். "ஒரு மனிதன் உண்மையாக சிந்தித்தால், அவன் புகை பிடிக்கவே மாட்டானே-! அப்படியானால் 'சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்' எப்படியிருக்கமுடியும்-? சிந்திக்கும் மனிதன் புகை பிடிக்கவே மாட்டானே," என்று எண்ணினேன். 39. ''அது எவ்வளவு ஏமாற்றுவதாக உள்ளது-!" என்று நினைத்தேன்; புகை- யிலை நிறுவனத்தினரும் அமெரிக்க மக்களே. ஓ, நாம் மாத்திரம் நமது கொள்கையை அனுசரித்து வாழ்வோமானால், நாம் ஒருவருக்கொருவர் உதவி புரிய பணி புரிவோம். நாம் ஒருவருக்கொருவர் உணர்ச்சி கொண்டு இருப்போமானால். இது எவ்வளவு மாய்மாலமான செயல்... நான் அந்த நிறுவனத்தினரின் பெயரைக் கூறாத காரணம் என்னவெனில், அவர்களைக் குறித்து சில மோசமான காரியங்களை நான் கூற வேண்டியிருக்கும். பணம் சம்பாதிப்பதற்கென ஒருவர் எவ்வளவு மாய்மாலமாக இருக்க முடியுமென்று பாருங்கள்-! 40. சிந்திக்கும் மனிதன் புகை பிடிக்கவே மாட்டான். அமெரிக்க பொதுமக்கள் இக்கண்ணியில் எவ்வளவு சுலபமாக விழுந்து விடுகின்றனர்-! இது மிகவும் அற்புதமானது என்று அவர்கள் எண்ணுகின்றனர். 41. இப்பொழுது கவனியுங்கள், நீங்கள் யாரை வேண்டுமானாலும் விஞ்ஞானிகளை; கேட்டுப் பாருங்கள். தார் (tar) உண்டாகாமல், புகை உண்டாகாது. ஒரு சிறு புகை எழும்பினாலும், அது தார். உங்களுக்கு புகை உண்டாகாமலிருந்தால், உங்களுக்கு தார் உண்டாகாது. அதனால் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. நீங்கள் வெறும் குச்சியை புகைக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் புகையைப் பெறும்போது, நீங்கள் புற்று நோயையும்- நிக்கோட்டினை உள்ளே கொள்கின்றீர்கள். 42. நீங்கள் சென்ற ஆண்டு என்னுடன் கூட வந்திருந்தால்; அது அதற்கும் முந்தின ஆண்டு நடந்த உலக சந்தையில் என்று நினைக்கிறேன். யூல்- பிரன்னரும் மற்றவர்களும் அங்கு பரிசோதனை செய்து காண்பித்தனர் (யூல்- பிரன்னர் ஒரு புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் - தமிழாக்கியோன்). அவர்கள் சிகரெட்டை எடுத்து. அதை ஏதோ ஒன்றில் போட்டு. அந்த புகையை சலவைக்கல் மேல் படியும்படி செய்தனர். அங்கிருந்த மருத்துவர், பஞ்சு சுற்றப்பட்ட ஒரு குச்சியின் உதவியால் (swab அதில் படிந்திருந்த நிக்கோடினைத் துடைத்து எடுத்து, அதை ஒரு எலியின் முதுகில் தடவி, அதை "கூட்டினுள் அடைத்தார். ஏழு நாட்களுக்கு ஒரு முறை அந்த எலியை அவர்கள் வெளியே எடுத்தனர். அந்த எலி புற்று நோயால் முழுவதும் பீடிக்கப்பட்டு, ஒரு சிகரெட்டிலிருந்து கிடைத்த நிக்கோட்டினால் உண்டான புற்று நோயின் காரணமாக நடக்கவே முடியவில்லை. 43. அவர் தொடர்ந்து, ''உங்களுக்குத் தெரியுமா. அவர்கள் வடிகட்டும் பொருளின் வழியாக அதை நீக்கி விட முடியும் என்கின்றனர். நிக்கோட்டினை நீக்கும் எந்த வடிகட்டும் பொருளும், புகையையும் நீக்கி விடும். ஏனெனில் புகையை உண்டாக்க உங்களுக்கு தார் அவசியம். அந்த தார் தான் புற்று நோய் உண்டாகக் காரணமாயிருக்கிறது' என்றார், 44. அதன் பிறகு அவர் அதை தண்ணீரின் வழியாக செலுத்தினார். அவர், சில சமயங்களில் நீங்கள் அதை வடிகட்டி விட முடியுமென்று நினைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு முறையும். நீங்கள் புகையை எங்கு இழுத்தாலும் அவர்கள், 'நான் புகையை உள்ளே இழுப்பதில்லை' என்கின்றனர்'' என்று கூறி விட்டு, அந்த புகையை ஏதோ ஒன்றின் கீழ் செலுத்தி விட்டு, அப்பொழுதும் அது புற்று நோய் உண்டாக்கக் கூடும் என்பதைக் காண்பித்தார். நீங்கள் உங்கள் தொண்டைக்குள் அதை விழுங்கக் கூடும். பாருங்கள்-? நீங்கள் என்ன செய்தாலும் கவலையில்லை, அது மரணத்தைப் பிறப்பிக்கும். பாருங்கள்-? 45. ஒரு நிறுவனம் ஒரு மனிதனை ஏமாற்றுகிறது. தங்கள் சொந்த ஜனங்களை அவர்கள் ஏமாற்றுகின்றனர் என்று நினைத்துப் பார்க்கும் போது-! ஒரு பருந்து அதன் இனத்தைக்கொண்டே வாழ்தல் போன்றது அது. பணம் சம்பாதித்தல், நாட்டுக்கு மரணத்தை விற்பது. வாலிபர் போர்க்களத்துக்கு சென்று நாட்டுக்காக மரிக்கின்றனர். இவர்களோ, “சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள், புகை பிடிக்கும் மனிதனின் ருசி' என்னும் பொய்யான சொற்களின் மூலம் இப்படிப்பட்ட ஒன்றை விற்கின்றனர். புகை பிடிக்கும் மனிதன் என்ன கூறுகிறான் என்றால்.... 46. ஜனங்கள் எவ்வாறு இக்கண்ணியில் விழுந்து போகின்றனர் பாருங்கள்-! அவர்கள் அதை வாங்குகின்றனர். பாருங்கள், அது பிசாசினால் உண்டானது. அவர்கள் உங்கள் உயிருக்காக கவலை கொள்வதில்லை. உங்கள் மீது அவர்களுக்கு எவ்வித உணர்ச்சியும் கிடையாது. நீங்கள். மரிப்பதைக் காண்பதற்கே அவர்கள் இப்படிப்பட்ட சரக்குகளை உங்களுக்கு விற்கின்றனர். அவர்களுக்கு பணம் கிடைத்தால் அதுவே போதும். 47. அது அரசியலையும் யுத்தத்தையும் போன்றது. எனக்கு யுத்தத்தின் மேல் நம்பிக்கை கிடையாது. நமக்கு யுத்தமே நடந்திருக்கக் கூடாதென்பதே என் அபிப்பிராயம். தேவன் நிறுவப்போகும் அந்த மகத்தான ராஜ்யத்தில், அவருடைய மகத்தான ஆதிக்கத்தின் கீழ் நிறுவப்படும் அந்த நாகரீகத்தில், வேறொரு யுத்தம் என்பதே இருக்காது. ஒரு தேசம் மற்றொரு தேசத்துக்கு விரோதமாக ஈட்டிகளைத் தூக்குவதில்லை. எங்கும் சமாதானம், நித்திய சமாதானம் நிலவும். 48. ஆனால் இத்தகைய நாகரீகம் யுத்தங்களைத் தோன்றச் செய்கின்றது. நாம் அதிக நாகரீகம் உள்ளவர்களாய் ஆகுந்தோறும், அதிக யுத்தங்கள் உண்டாகின்றன. ஒருவர் மற்றவரைக் காட்டிலும் அதிக நாகரீகமுள்ளவராய் ஆகப்பார்க்கின்றார். அதிக நாகரிகம் அதிக யுத்தத்தைக் கொண்டு வருகிறது. பாருங்கள்-? 49. இந்த நாகரீகத்தின் கீழ் ஒருவர் இத்தகைய செயலைப் புரிவதைப் பாருங்கள். அது செய்யும் ஒன்றே ஒன்று என்னவெனில், நீங்கள் அதிக சிகரெட்டுகளை வாங்கச் செய்ய, உங்களை ஏமாற்றுகிறது. ஒரு மனிதன் சிகரெட்டுகளை புகைக்கும் போது, அது பிசாசினால் விளைந்த செயல் என்பதே என் நம்பிக்கை. அது மனிதனுக்குள் இருக்கும் அல்லது ஸ்திரீக்குள் இருக்கும். நிக்கோட்டின் பிசாசு. ஒரு சிகரெட்டு அந்த நிக்கோட்டின் பிசாசை திருப்திபடுத்தி, உங்களை அலைக்கழிப்பதை அது விட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வடிகட்டும் பொருள் இணைத்த சிகரெட்டை புகைப்பீர்களானால், அது மூன்றில் ஒரு பாகம் புகையையே, அதாவது மூன்றில் ஒரு பாகம் நிக்கோட்டினையே. அதன் வழியாக அனுப்புகிறது. அப்படியானால் ஒரு சிகரெட்டின் இடத்தை மூன்று சிகரெட்டுகள் எடுத்துக் கொள்கின்றன. அதாவது ஒரு சிகரெட்டுக்குப் பதிலாக நீங்கள் மூன்று சிகரெட்டுகளைப் புகைக்கின்றீர்கள். 50. பாருங்கள், உங்களை ஏமாற்றி அதிக சிகரெட்டுகளை விற்க கையாளப் படும் தந்திரமாகும் இது. ஒரு மனிதன் தன் 'பைப்' (pipe) ஐ உபயோகித்து அல்லது வடிகட்டும் பொருள் இணைக்கப்படாத சிகரெட்டை புகைக்க அவர்கள் அனுமதிப்பதைக் காட்டிலும் இவ்வழியில் அவர்களால் அதிக சிகரெட்டுகளை விற்க முடியும். பாருங்கள், அது பிசாசினால் உண்டானது. 51. நான் அங்கு நின்று கொண்டு, இது எவ்வளவு ஏமாற்றம் வாய்ந்தது என்று எண்ணிக் கொண்டிருந்த போது, வேறொரு கேள்வி என் மனதில் எழுந்தது. நான் குனிந்து அந்த சிகரெட்டு பாக்கெட்டை மறுபடியும் உற்று நோக்கினேன்" அப்பொழுது ஏதோ ஒன்று சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள். புகை பிடிக்கும் மனிதனின் ருசி' என்னும் சுலோகம் சரியே" என்று என்னிடம் கூறுவது போன்று தோன்றினது. புகையிலை விஷயத்தில் இயற்கையில் ஏமாற்றக் கூடியதாய் அமைந்துள்ள ஒன்று. இன்றைய சபைகளிலும் ஏமாற்றக் கூடிய ஒன்றாய் அமைந்துள்ளதாக சிலர் கருதுவதாக (பாருங்கள்?) என் மனதில் தோன்றினது, 52. எது உண்மை எது சரி என்று அறியக்கூடாத ஒரு பெரிய வஞ்சக நிலைக்கு முழு உலகமும் வந்துள்ளது. பாருங்கள், அரசியலிலும், சமூக விவகாரங்களிலும், பள்ளிக்கூடங்களிலும், எல்லாவற்றிலுமே அது ஏமாற்றக் கூடிய நிலையை அடைந்துள்ளது. 53. ஒரு வாலிபன் அன்றொரு நாள் என்னிடம் இதைக் கூறிக்கொண்டு இருந்தான். அவன் இராணுவ முகாமுக்குச் சென்றிருந்த போது, ஒரு வாலிப் போர்வீரனின் மேல் ஒரு "டாங்க்' ஏறி விட்டதால், அவனுடைய நுரையீரல்-களும், குடல்களும் வெளியே வந்து விட்டதாம். அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 அல்லது 4 மருத்துவர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். எல்லோரும் சிகிச்சைக்காக வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். 2, 3 போர் வீரர்கள் தங்கள் நண்பனை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தனர். அவனால் மூச்சு விடக்கூட முடியவில்லை... அவன் மூச்சு விட்ட ஓவ்வொரு முறையும் அவனுடைய விலா எலும்பு நுரையீரல்களைக் குத்தியதால், அவைகளிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. விபத்தில் அகப்பட்ட இந்த வாலிபனை அவர்கள் வரிசையின் பின்னால் நிறுத்தி, சாதாரண காது வலி போன்ற சிறு வியாதி உள்ளவர்களை அவர்கள் வரிசையின் முன்னால் அனுப்பினர். 54. அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய தருணம் அந்த வரிசையில் வந்த போது, ஒரு பெரிய இராணுவ அதிகாரி தன் பிள்ளையை சிகிச்சைக்காக கொண்டு வந்தார். அது அவருடைய மகனோ அல்லது மகளோ. அந்த பிள்ளையின் கையில் சொறி பிடித்திருந்தது. உடனே அங்கிருந்த மருத்துவர் வரிசையை நிறுத்தி விட்டு அந்த பிள்ளையை வரிசையின் முன்னால் நிறுத்தி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். விபத்திற்குள்ளான அந்த பையன் மரித்துப்போனான். பார்த்தீர்களா-? 55. ஓ, அந்த இராணுவ அதிகாரிக்கு மாத்திரம், அந்த வரிசையில் வந்து கொண்டிருந்த தன் சகோதரனின் மேல் உண்மையான உணர்ச்சி இருந்து இருக்குமானால், அவர், "என் பிள்ளைக்கு அவசரமில்லை, அவன் காத்து இருக்கலாம், அந்த வாலிபனுக்கு உடனே சிகிச்சை அளியுங்கள்," என்று சொல்லியிருப்பார். 56. ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் அதிகாரத்தைக் காண்பிக்க விரும்புகின்றனர். எல்லோரும் அப்படியல்ல. இல்லை, எல்லோரும் அப்படியல்ல. ஆனால் பலர் அப்படியிருக்கின்றனர். இந்த மனிதனுக்கு, கையில் சொறி பிடித்திருந்த தன் பையனின் பேரில் மாத்திரமே எண்ணம் இருந்ததே தவிர, டாங்கின் கீழ் அடிபட்டு கூழ்போல் ஆன அந்த ஏழை பையனின் மீது இல்லை. ஒருக்கால் இதே பையன் என்றாவது ஒரு நாள் போர்க்களத்தில் அந்த அதிகாரியின் உயிரைக் காப்பாற்றக் கூடும். பாருங்கள், அவர்கள் இதைக் குறித்தெல்லாம் யோசனை செய்வதில்லை, தங்களைக் குறித்தே யோசனை செய்கின்றனர். 57. சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்." அதை நான் உற்று நோக்கி, ''அது இன்றைய ஸ்தாபனங்களைப் போல், இன்று நாம் பெற்றுள்ள சபை- களைப் போல் உள்ளது'' என்று நினைத்துக் கொண்டேன். அவை ஒவ்வொன்றுக்கும் தங்கள் சொந்த வடிகட்டும் பொருள் உள்ளது. அவை தங்களுக்கென குறிப்பிட்ட வடிகட்டும் பொருளைக் கொண்டுள்ளன. அவர்களுக்கு விருப்பமானதை அவர்கள் அதன் வழியாக செலுத்துகின்றனர், அவர்களுக்கு விருப்பமில்லாததை அவர்கள் செலுத்துவதில்லை. தங்கள் குறிப்பிட்ட வடிகட்டும் பொருளை அவர்கள் உபயோகித்து அவர்கள் உள்ளே செலுத்தி வடிகட்டிக் கொள்கின்றனர். அவர்களிடம் உள்ள அவிசுவாசிகளைத் திருப்திபடுத்துவதற்கென, உலகம் வடிகட்டும் பொருளின் வழியாக செல்ல அவர்கள் அனுமதிக்கின்றனர். அவர்கள் என்னவாயிருப்பினும், அவர்களிடம் பணம் இருந்தால், அவர்களை உள்ளே சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் என்னவாயிருப்பினும், அவர்கள் புகழ் வாய்ந்தவர்களாயிருந்தால், அவர்களை உள்ளே சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அதைக் குறித்து ஒரு காரியம் உண்டு, தேவனுடைய சபையில் நீங்கள் அவ்வாறு சேர்ந்து கொள்ளமுடியாது. நான் ஸ்தாபனங்களைக் குறிப்பிடவில்லை, உண்மையான தேவனுடைய சபையைக் குறிப்பிடுகிறேன். 58. இன்றைய புகையிலை நிறுவனங்களைப் போல். நான் குறிப்பிட்ட இந்த சபைகளை - அதாவது ஸ்தாபனங்களை - சேர்ந்துக்கொள்பவர்களுக்கு ஒரு ருசி உண்டு. அது தான் உலகத்திலுள்ள முதல் தரமானவைகளின் பேரில் அவர்கள் கொண்டுள்ள ருசி. ஒவ்வொரு ஸ்தாபனமும் அதற்கென ஒரு சொந்த வடிகட்டும் பொருளை வைத்துள்ளது. அவர்கள் பிரசங்கத்தின் போது 'ஆமென்" என்று கூறும் உண்மையான கிறிஸ்தவர் அனைவரையும் வடிகட்டி விட்டு, தேசத்தில் காணப்படும் தலைமயிர் கத்தரித்து, முகத்தில் வர்ணம் தீட்டியுள்ள யேசபேல்களை. அவர்கள் புகழ்வாய்ந்தவர் என்னும் காரணத்தால், சேர்த்துக் கொள்கின்றனர். ''இன்னார் இன்னார் எங்கள் சபைக்கு வருகின்றார். அவர் ஒரு சிறந்த சினிமா நடிகர்...' அப்படிப்பட்ட வடிகட்டும் பொருளை தான் அவர்கள் உபயோகிக்கின்றனர். எங்கள் ஸ்தாபனம். தலைவர் இன்னார் இன்னார், இராணுவ அதிகாரி போன்ற பிரபலம் வாய்ந்தவர்கள் எங்கள் ஸ்தாபனத்தின் அங்கத்தினர்கள். அவர்கள் எப்படிப்பட்ட வடிகட்டும் பொருளை உபயோகிக்கின்றனரென்று பாருங்கள். அந்த வடிகட்டும் பொருள் உலகப் பிரகாரமானது. உலகப் பிரகாரமான ஜனங்கள். 59. தங்களுக்கு என்ன வேண்டுமென்று ஜனங்களுக்குத் தெரியும். எனவே தங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், அவர்கள் உடைய உலகப்பிரகாரமான ருசியைத் திருப்திபடுத்த அவர்கள் ஒரு பிரத்தியேக வடிகட்டும் பொருளைப் பெற்றுக்கொண்டு. அது போதுமான உலகப் பிரகாரமானவைகளை அதன் வழியாகப் பாய அனுமதிக்கவேண்டும். "சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள், புகைபிடிப்பவனின்; மத சம்பந்த- மான உலகத்தின் வடிகட்டும் பொருள், உலகப் பிரகாரமான மனிதனின் ருசி." 60, அவர்களுக்கு ஒரு ஆத்துமா இருப்பதால், அவர்கள் பக்தியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். 61. நாம் முதலில் இத்தேசத்திற்கு வந்தபோது, இந்தியர்கள் சூரியனை வழிபடுவதை நாம் கண்டோம். ஏன்-? அவன், மானிட வர்க்கத்தைச் சேர்ந்தவன். நாம் தூரத்திலுள்ள ஆப்பிரிக்காவின் காடுகளுக்குச் செல்வோம் ஆனால் அங்குள்ள சுதேசிகள் ஏதாவதொன்றை வழிபடுவதை நாம் காணலாம். ஏன்-? அவர்கள் மானிடர். அவர்கள் வழிபட வேண்டும். 62. எனவே மனிதன் ஒருவன், அவன் எவ்வளவாக விழுந்து போன நிலையில் இருந்தாலும் கூட, ஏதோ ஒன்று எங்கோ உள்ளது என்பதை அறிந்து இருக்கிறான். ஆனால் அவன் உலகத்தின் பேரில் அவ்வளவாக ருசி கொண்டு உள்ள காரணத்தால், அவனால் சரியான வடிகட்டும் பொருளைத் தெரிந்து கொள்ள முடிகிறதில்லை. அவன் தனக்குத் தானே உண்டாக்கிக் கொண்ட வடிகட்டும் பொருளை வைத்திருக்கிறான். ஒவ்வொருவரும் தங்களுக்கு, அவசியமான் வடிகட்டும் பொருளை தாங்களே உண்டாக்கிக் கொள்கின்றனர். 63. ஒவ்வொரு சிகரெட் கம்பெனியும் தங்கள் வடிகட்டும் பொருள் என்ன செய்யும் என்பதைக் குறித்து பெருமை அடித்துக் கொள்கின்றன. இது உண்மையான வடிகட்டும் பொருள், இதுவே சிறந்த வடிகட்டும் பொருள். எல்லாவற்றைக் காட்டிலும் இதுவே முன்னிலையில் நிற்கின்றது,'' போன்றவை, ''ருசி மேலே வருகின்றது,'' ஓ, தயவு செய்து மேலே வருகின்றது ஆனால் அதற்கு பின்னால் என்ன சம்பவிக்கின்றது-? அது நிச்சயமாக சிந்திக்கும் மனிதனாகவோ அல்லது சிந்திக்கும் ஸ்திரீயாகவோ இருக்க முடியாது . ஆனால் அவர்கள் அப்படித்தான் சொல்லி ஜனங்களை ஏமாற்றுகின்றனர். 64. நம் காலத்து ஜனங்களுக்கு ருசியுண்டு என்று நாம் காண்கிறோம். ஒரு மனிதன் ஏன் சிகரெட் புகைக்கிறான்-? ருசியைத் திருப்திபடுத்த. ஒரு ஸ்திரீ ஏன் சிகரெட் புகைக்கிறாள்-? ருசியைத் திருப்திபடுத்த. 65, ஒரு சபையானது தனக்கென மதசம்பந்தமான ஒரு குழுவை சேர்த்துக் கொள்ளக் கருதினால். ஜனங்கள் விரும்பும் ருசியை அவர்களுக்களிக்க அது ஒரு பிரத்தியேக வடிகட்டும் பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும், அவர்கள் விரும்பும் ருசியைப் பெறாமல் போனால், அவர்களுக்கு அந்த சிகரெட் வேண்டாம். அது போன்று. அவர்கள் விரும்பும் ருசியை அவர்களால் ஒரு மதத்தில் பெற முடியாமல் போனால், அவர்கள் அந்த மதத்தை ஏற்றுக் கொள்வதில்லை. அது மிகவும் தெளிவாய் உள்ளது. 66. குட்டை கால்சட்டை அணிந்து, தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, முகத்தில் வர்ணம் தீட்டிக்கொண்டு பாலுணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை அணிந்துள்ள பெண்கள். அவர்களுக்கு அது தான் வேண்டும். அவர்களுக்கு அது பிரியம். 67. இன்று காலை- சென்ற ஞாயிறு காலை நான் சக்கரத்துக்குள் சக்கரத்தைச் குறித்து பேசினேன். அதாவது ஆவிக்குள் சிறு ஆத்துமா உள்ளதென்றும், எப்படி சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் நடுவேயுள்ள ஆவி, முற்றிலுமாக பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட முடியும் என்றும் கூறினேன். நீங்கள் எல்லோரும், அதைப் புரிந்து கொண்டீர்களா-? 68. அந்த செய்தியின் தொடர்ச்சியாக இவ்வுலகத்தின் தேவன், கடைசி காலத்தில் ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள் என்னும் செய்திகள், வெளிப்புறம், நடு வட்டம்..... முதல் வட்டம் மனித உணர்ச்சிகள், இரண்டாம் வட்டம் ஆவியின் உணர்ச்சிகள். சுய நலம், விருப்பம் போன்றவை. ஆனால் உள்ளில் ஆத்துமா உள்ளது. அந்த ஆத்துமா முன் குறிக்கப்பட்டுள்ளது. எனவே வெளிப்புறத்திலுள்ள சரீரத்தை ஆவியின் கீழ்ப்படிதலுக்குக் கொண்டு வர. அவர்கள் ஆவியை அபிஷேகிக்க முடியும். ஆனால் 'பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்'' (எசே18:4,20). அவிசுவாசத்தின் காரணமாக தேவனுடைய வார்த்தையைப் புறக்கணிக்கும் ஆத்துமா - அதன் ஒரு பாகமாக அது உள்ளது அந்த ஆத்துமா நித்திய காலமாக... எப்பொழுதும். 69. நித்திய பரலோகம் உண்டு என்று நான் விசுவாசிப்பது போல், நித்திய மரணம் உண்டு என்றும் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நித்திய நரகம் உண்டு என்று நான் விசுவாசிப்பதில்லை. நித்திய நரகம் என்று ஒன்று கிடையாது. ஜனங்கள் நித்திய மரணத்தினால் பீடிக்கப்படலாம். இன்று உலகில் பக்தியுள்ள அநேகர் எப்பொழுதும் மரித்தவர்களாய் இருக்கின்றனர், 70. தலைமயிரைக் கத்தரித்துக்கொண்டு, முகத்தில் வர்ணம் தீட்டிக்கொண்டு, இன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருத்தி உயிரோடிருக்கும் போதே செத்தவளாயிருக்கிறாள், வேதம் அவ்வாறு கூறுகின்றது. பாருங்கள்-? அவள் ஒருக்கால் பக்தியுள்ளவளாயிருக்கலாம். ஆனால் அவள் இரட்சிக்கப்படவே இல்லை. அவளுக்கு வெளிப்புற அசைவு உள்ளது. அவள் பாடற்குழுவில் பாடலாம், அல்லது ஆவியில் நடனமாடலாம், அந்நிய பாஷை பேசலாம், ஆவியின் எல்லா வரங்களும் இருக்கலாம்; ஆனால் உள்ளுக்குள் இருக்கும் ஆத்துமா தேவனுடைய குமாரத்தியாக இராமல் போனால் (பாருங்கள்-?) அவள் என்ன செய்த போதிலும், அவள் இழந்த நிலையில் இருக்கிறாள். 71. இஸ்ரவேல் ஜனங்கள் வெளிப்புறத்தில் ஆவிக்குரிய பிரகாரமாக, தேவனுடைய நன்மையால் நிறையப்பட்டவர்களாய். தேவனிடம் பயபக்தி உடன் நடந்து கொண்டனர். ஆனால் அது கிரியை செய்யவில்லை. அவர்கள் உடைய உள்பாகம் வார்த்தையை அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. 72. ஆனால் நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறக்கும் போது, நீங்கள் தேவனுடைய குமாரராகி விடுகிறீர்கள். நீங்கள் எப்பொழுதுமே தேவனுடைய குமாரராயிருந்தீர்கள். நீங்கள் எப்பொழுதுமே தேவனுடைய குமாரராய் இருப்பீர்கள், அதை பிரிக்க ஒரு வழியும் இல்லை, ஏனெனில் உங்களுக்கு நித்திய ஜீவன் உள்ளது. நித்தியம் துவங்கவேயில்லை; அதற்கு முடிவும் இல்லை, 73. ஓ, தேவனுடைய கிருபையின் காரணமாகவே, அவர் இத்தகைய பரம ரகசியங்களை நாம் புரிந்து கொள்ளும்படி செய்திருக்கிறார். பவுல் எபேசியருக்கு எழுதின நிரூபத்தில் புருஷனையும் மனைவியையும் குறித்துப் பேசும் போது, 'இது ஒரு பெரிய இரகசியம்'' என்கிறான் (எபே.5:32) - அதாவது மனைவிகள் புருஷர்களுக்கு எப்படி கீழ்ப்படிய வேண்டுமெனும் விஷயம். வேதம் முழுவதிலுமே இங்கு இரண்டாம் முறையாக பயபக்தியைக் குறித்து சொல்லப்படுகிறது என்று நினைக்கிறேன். மனைவி புருஷனிடத்தில் பய பக்தியாய் நடந்து கொள்ளவேண்டும் என்னும் போது, அவள் அவ்வாறு பயபக்தியாய் அவனிடத்தில் நடந்து கொள்ளும் அளவுக்கு புருஷனும் மனைவியின் முன்னிலையில் தேவனுடைய குமாரனைப் போல் நடந்து கொள்ள வேண்டும். அவன் அத்தகைய வாழ்க்கை வாழத் தவறினால், அவள் அவனிடம் பயபக்தியாய் நடந்து கொள்ள மாட்டாள். ஏனெனில் அவன் எப்படிப் பட்டவன் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். ஆனால் ஒரு மனிதன் தன் மனைவியிடமும் குடும்பத்தினரிடமும் மரியாதையுடனும் சுத்தத்துடனும் தேவனுடைய உண்மையான ஊழியக்காரன் என்னும் முறையில் நடந்து கொள்வானானால், அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் எல்லோருமே அவனுக்கு மரியாதை செலுத்தி அவனிடம் பயபக்தியாய் நடந்து கொள்வார்கள். 74. பெண்களைக் கவனியுங்கள். அவர்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ள விரும்புகின்றனர். அவர்கள் குட்டை கால்சட்டை அணியவும், வர்ணம் தீட்டிக் கொள்ளவும், அழகு படுத்தும் சாதனங்களை உபயோகிக்கவும் விரும்புகின்-றனர். இன்றைக்கு அவர்கள் மேலொன்றும் கீழொன்றுமாக இரு துண்டு நீச்சல் உடைகளை (bikinis) அணிகின்றனரே, அதை அணிந்து கொள்ள அவர்கள் விரும்புகின்றனர். இருப்பினும், அவர்கள் சபைக்கும் செல்கின்றனர். ஆவியின் மேலுள்ள அபிஷேகத்தை நீங்கள் காண்கிறீர்களா-? ஆத்துமாவின் மேல் அல்ல. பாருங்கள்-? 75. அவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருந்து கொண்டு, இப்படிப்பட்ட செயல்களைப் புரியவும் விரும்புகின்றனர். போதகரும், அதனால் பரவாய் இல்லை என்கிறார். அவர் பரவாயில்லை என்பாரானால், நீங்கள் அங்கித்தி-னராக இருக்கலாம்; உங்கள் பெயர் என் சபை புத்தகத்தில் இருக்கலாம். அதனால் பரவாயில்லை'' அப்படியானால், உலகப்பிரகாரமான பெண்ணின் ருசிக்கு ஏற்ப அவர் அவளுக்கு அவருடைய ஸ்தாபனத்தின் வடிகட்டும் பொருளைத் தருகிறார். அவள் உலகத்தை நேசிக்கிறாள், அவளுக்கு அதன் ருசி மிகவும் பிடிக்கும். எனவே அவளுக்கு ஒரு வடிகட்டும் பொருளை அவர் தருகிறார், ஆனால் அவள் சிந்திக்கும் ஸ்திரீயாயிருப்பதிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறாள். ஆனால் அதை பாருங்கள்! அங்கு தான் நான் இந்த பொருளைக் கண்டேன். 76. அவள் சிந்திக்கும் ஸ்திரீயல்ல. அவள் சிந்திக்கும் ஸ்திரீயாக இருப்பாள் ஆனால், சபை அவளை கடைசி நாளில் நியாயந் தீர்க்கப் போவதில்லை என்பதை அவள் அறிந்திருப்பாள். சபையானது இப்பொழுது அவள் அங்கத்தி-னளாய் இருப்பதின் அடிப்படையிலும், அவள் சார்ந்துள்ள வட்டாரங்களிலும் சங்கங்களிலும் அவள் கொண்டுள்ள உத்தமத்தின் அடிப்படையிலும் அவளை நியாயந்தீர்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அதன் அடிப்படையில் தான் நியாயந்தீர்க்கின்றனர். ஆனால் தேவன் அவளைக் கடைசி நாளில் நியாயந் தீர்ப்பார். எனவே அவள் சிந்திப்பதில்லை. 77. புகை பிடிக்கும் ஒரு மனிதனைப் போல், அவனுக்கு சிகரெட்டின் மீது அதிக பிரியம் உள்ளதால், அவனுடைய சிந்தனை சக்திகள் நிக்கோடின் விஷத்தினால் மறத்துப் போய் விட்டன. ஒரு ஸ்திரீயின் விருப்பங்களும் அவளுடைய சிந்தனை சக்திகளை மறத்துப் போகச் செய்து விட்டதால், அவள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பான செயல்களைப் புரிகிறாள். அவள் அதை செய்ய விரும்புகிறாள். அது உலகப் பிரகாரமான ஸ்திரீயின் ருசியைத் திருப்திபடுத்துகிறது. எனவே அவள் உலகப் பிரகாரமான சபையின் வடிகட்டும் பொருளை எடுத்துக் கொள்கிறாள். அவள் எவ்வித தங்கு தடையும் இன்றி அதன் வழியாகச் செல்கிறாள். தொல்லைப்படுத்த ஒன்றுமேயில்லை. 78. அதுவே உண்மையென்று நாம் காண்கிறோம். போதகர், "அது பரவாயில்லை. அப்படி செய்யும் ஸ்திரீகளை நாங்கள் கடிந்து கொள்வது இல்லை. அதில் போதிய பாவம் இருந்தாலும், அது பரவாயில்லை'' என்கின்றார். அது அவருடைய வடிகட்டும் பொருளின் வழியாய், அவர்கள் வேத சாஸ்திர வடிகட்டும் பொருளின் வழியாய் சென்று, வேத சாஸ்திர ருசியைப் பெற்றுள்ளனர் என்பதை அது காண்பிக்கிறது. அவர்கள் நிச்சயமாக தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக செல்லவில்லை. இல்லை, ஐயா! 79. வேதசாஸ்திர சிந்தனைக்காரனுக்கு வேதசாஸ்திர வடிகட்டும் பொருளும், சபை சிந்தனைக்காரனுக்கு சபை வடிகட்டும் பொருளும், சிகரெட் சிந்தனைக்-காரனுக்கு சிகரெட் வடிகட்டும் பொருளும் இருக்குமானால், உண்மையான சிந்தனைக்காரனுக்கு, உண்மையான வடிகட்டும் பொருள் எங்கோ இருக்க வேண்டும். தேவன், ஒரு வடிகட்டும் பொருளை வைத்துள்ளார், அது தான் அவருடைய வார்த்தை, அது பிரிக்கும் ஒன்று. ஏனெனில் அது பாவத்தி- னின்று பிரிக்கும் பிரிவினையின் தண்ணீராய் உள்ளது, அதுவே சிந்திக்கும் மனிதன் அல்லது பரிசுத்த மனிதனின் ருசி. 80. ஒரு மனிதன் உலகம் என்னும் வடிகட்டும் பொருளிள் வழியாக செல்லும் போது, அவனுக்கு உலகப்பிரகாரமான ருசி கிடைக்கின்றது. புகையிலை நிறுவனத்தினர் போன்று. பலரை இவ்வடிகட்டும் பொருளின் வழியாக அவன் செலுத்துவதால், அவனுக்கு அதிக அங்கத்தினர்கள் கிடைக்கின்றனர். நீங்கள், ஆண்களைக் காட்டிலும் அதிக பெண்கள் சபைக்குச் செல்கின்றனர்' எனலாம். அது ஒருக்கால் அப்படியிருக்கலாம். அவளுக்கு. விருப்பமானதை எதையும் அங்கு செய்யலாம் என்பதும் உண்மை. அது உண்மை-! அவள் எதனோடும் சேர்ந்து கொள்வாள். அவள் சபையின் வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து வந்தாள் . அவள் மாத்திரம் தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து வந்திருப்பாளானால், அவள் வித்தியாசப்பட்டவளாக வெளி வந்திருப்பாள். பாருங்கள்-? அவள் தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து, கத்தரிக்கப்பட்ட தலை மயிருடன் வெளிவர முடியாது. அவளால் அப்படி செய்யவே முடியாது. 81. இது சிலருக்கு கசப்பாக இருக்கப்போகின்றது. அவள் தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக கடக்கத் துவங்கும் போது. அவர்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கூடாதென்று அது கூறுகின்றது. பிறகு என்ன-? அவள் மறுபக்கம் வெளியே வருகிறாள். ஒரு ஸ்திரீ அவ்வாறு செய்வது பாவம் என்றும் கனவீனமான செயல் என்றும் கூறினால்... அவள் விரும்பினால்....' 'அவள். தலைமயிர் கத்தரிக்கப்பட வேண்டுமென்று விரும்பினால், அவள் சிரைத்துக் கொள்ளட்டும். ஒரு பெண் தலைமயிரை சிரைத்துக் கொள்ளுதல் என்பது அவளுக்கு வெட்கமாயிருக்கும். அப்படி ஆனால் அவள் முக்காடிட்டுக் கொள்ளட்டும்'' என்று பவுல் கூறினான் (1 கொரி.11:5-6), தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது (1 கொரி.11:15), தொப்பி அல்ல. ஸ்திரீயே-! தலைமயிரே அவளுடைய முக்காடு என்று வேதம் கூறுகின்றது. அவள் கர்த்தருக்கென்று நசரேயளாக இருக்கிறாள் என்பதை அது காண்பிக்கிறது. ஒரு பெண்ணுக்குள்ள நீண்ட தலை. மயிர், அலள் கர்த்தருக்கென்று நசரேயளாக இருக்கிறாள் என்பதற்கு எடுத்துக் காட்டாய் அமைந்துள்ளது. 82. அது உண்மையென்று நாமறிவோம். உலகில் சிந்திக்கும் மனிதன் என்று அழைக்கப்படுபவன் புகைபிடித்து தன் ருசியைப் பெற்றுக்கொள்வானானால், அந்த புகையிலையிலிருந்து தாரையும் பெற்றுக் கொள்கிறான் என்று அறிந்து கொள்ள அவன் போதிய அறிவு படைத்திருக்க வேண்டும். அவனுக்கு அதிக சிகரெட்டுகளை விற்க, அவன் அதிக சிகரெட்டுகள் வாங்குவதற்காகவே; இது கையாளப்படுகிறது. 83. சபையின் வடிகட்டும் பொருளும் அதிக அங்கத்தினர்களைப் பெறுகின்றது. அவர்கள் என்ன செய்தாலும் பேசாமலிருந்து, அவர்கள் சபையை சேர்ந்து கொள்ளலாம் என்னும் போது, அவர்கள் அதிக அங்கத்தினர்களைப் பெறுகின்றனர், உண்மையாக வார்த்தையினால் பிறந்த கிறிஸ்தவர்களைத் தவிர மற்றெல்லாரையும் வடிகட்டி விட்ட சபைகளுக்கு இன்றிரவு நாம் செல்வோமானால் எப்படியிருக்கும். இன்றிரவு சுவற்றினருகில், எழுதப்படாத அநேக பிரசங்கங்கள் இருக்கும். அது உண்மை. ஏனெனில் அது வடிகட்டும் பொருளின் வழியாக சென்றுள்ளது. 84, என் இருதயத்தில் ஒரு வாஞ்சை இருக்குமானால்-என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் அதே வாஞ்சையைப் பெற்றுள்ளனர் என்று நம்புகிறேன். தேவனே, உமது வடிகட்டும் பொருளின் வழியாக என்னைக் கடக்கப் பண்ணும் என்பதே அது. தாவீது கூறினது போல், ''தேவனே, என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். வேதனை உண்டாக்-கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து. அதை எடுத்துப் போடும்" (சங்.139:23-24). பாருங்கள்-? எனக்கு தேவனுடைய வடிகட்டும் பொருள் அவசியம். உலகம் என்ன செய்தாலும், சபை எதை பெற்றிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. இந்நாட்களில் ஒன்றில் நியாயத் தீர்ப்புக்காக நான் யார் பக்கத்தில் நின்று கொண்டிருப்பேன் என்று சிந்தனை செய்து பார்க்க, நான் சிந்திக்கும் மனிதனாக இருக்க விரும்புகிறேன், 85. கவனியுங்கள். அதிக சிகரெட்டுகள் விற்பதற்காக புகையிலை நிறுவனத்-தார் அப்படி செய்கின்றனர். சபையோ அதிக அங்கத்தினர்களைப்பெற அப்படி செய்கின்றது. குட்டை தலைமயிர் வைத்து, குட்டை கால்சட்டை அணிந்துள்ள ஒரு பெண் தேவனுடைய வடிகட்டும் பொருளில் அகப்பட்டுக் கொள்வாள். அவள் குட்டை தலைமயிர் வைத்துக்கொண்டே அதன் வழியாக கடந்து செல்ல முடியாது. ஏனெனில் அவள் அப்படி செய்யக் கூடாதென்று வேதம் போதிக்கின்றது, அவள் அப்படி செய்யும் போது தன் தலையைக் கனவீனப்-படுத்துகிறாள் என்று நாம் அறியவேண்டும். ஆனால் அவளும் மற்றவர்களும் சபையின் வடிகட்டும் பொருள் வழியாக கடந்து சென்று விடுகின்றனர். 86. நான் யாரையும் அவமதித்துப் பேசுவதில்லை. நான் எந்த நபரைக் குறித்தும் தனிப்பட்ட விதத்தில் குறை கூறிப் பேசுவதில்லை. ஆனால் அது சபையில் காணப்படும் பாவம். நான் அப்படி கூறுவதற்கு நீங்கள் சாட்சிகள். நான் குமாரி இன்னார் இன்னார் இப்படி நடந்து கொள்கிறாள்; திரு.இன்னார் இன்னார் அல்லது சங்கை இன்னார் இன்னார் இப்படி நடந்து கொள்கிறார்" என்று தனிப்பட்ட விதத்தில் இதை குறிப்பிடவில்லை. இல்லை, ஐயா-! நான் பாவத்தை பாவம் என்று எடுத்துரைக்கிறேன். அது என் குடும்பத்தில் காணப் பட்டாலும், என்னில் காணப்பட்டாலும், அல்லது மற்றவர் எவரிலும் காணப் பட்டாலும், அது பாவமே. நான் தனிப்பட்ட நபர் எவருக்கும் விரோதமாக இதைக் கூறவில்லை. நான் பாவத்துக்கு விரோதமாகப் பேசுகிறேன். அது எனக்குள் இருந்தாலும் வேறு யாருக்குள் இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. அவர்கள் தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து செல்லத் துவங்கும்போது, எந்த பாவமும் அவர்களை அங்கேயே நிறுத்தி விடும். 87. கவனியுங்கள். ஆனால் குட்டை தலைமயிர் வைத்துக் கொள்ள விரும்பும் பெண், அல்லது குட்டைகால் சட்டை அணிய அல்லது வர்ணம் தீட்டிக் கொள்ள விரும்பும் பெண் எவளும் பெந்தெகொஸ்தே வடிகட்டும் பொருளின் வழியாக எளிதில் கடந்து விடுவாள். அதைக் குறித்து ஒன்றுமேயில்லை. அது மரணத்துக்குள் அவர்களைக் கொண்டு செல்கிறது. ஏனெனில் அவள், ''அதனால் பாதகம் ஒன்றுமில்லை,'' என்கிறாள். நீங்கள் உலகத்திலும் உலகத் தில் உள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், உங்களிடத்தில் தேவனின் அன்பு சிறிதளவும் கூட இல்லை (1 யோவான் 2:15). 88. அப்படியானால், இந்த ஆவியின் வழியாக அவள், தேவனால் உண்டாகாத காரியங்களையும், தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான காரியங்களை-யும் தன் ஆத்துமாவுக்குள் இழுத்துக்கொள்ள முடியும். அதுதான் அவளுடைய ஆத்துமாவிலுள்ள ருசியாயிருக்குமானால், அது ருசி பார்த்தல், பார்த்தல், ருசி பார்த்தல். அது அவளுடைய யோசனையின் மூலமாக வரக்கூடும். ''அதனால் ஒரு பாதகமும் இல்லை. எனக்கு ருசியுள்ளது; எனக்குஉணர்ச்சியுள்ளது. அது சரியென்ற உணர்ச்சி எனக்குத் தோன்றுகிறது." அது அதன் வழியாக வந்து அவளுடைய ஆத்துமாவுக்குள் நுழைந்துவிடுகிறது. அவளுடைய ஆத்துமாவும் அதே ரகமாக இருக்குமானால். அவள் தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து வரவில்லையென்பதை அது காண்பிக்கின்றது. அவள் கத்தரிக்கப்பட்ட தலைமயிரைக் கொண்டவளாய், அழகு படுத்தும் சாதனை-களைத் தடவிக் கொண்டு, குட்டை கால்சட்டை, நீண்ட கால்சட்டை, அவர்கள் 'ஸ்லாக்ஸ்' (slacks) என்று அழைக்கிறார்களே, அது போன்றவைகளை அணிந்து மனிதனைப் போல் காணப்பட்டு, அப்படிப்பட்ட காரியங்களைச் செய்து, இவ்வுலகத்திற்காக வாழ்வாளானால். அவள் தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து செல்ல முடியாது. இல்லை, ஐயா-! அது அவளைத் துவக்கத்திலேயே நிறுத்தி விடும். 89. கவனியுங்கள், ஒரு பெண்ணின் அழகான சிகப்பு உதடுகளையும், வர்ணம் தீட்டப்பட்ட முகத்தையும், அவள் அணிந்துள்ள குட்டை கால்சட்டை, இரு துண்டு நீச்சல் உடை. இன்னும் அவள் கொண்டுள்ள மற்றவைகளையும் உற்று நோக்கும் ஒரு மனிதன், உண்மையான சிந்திக்கும் மனிதன் அப்படிப் பட்டவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். ஆனால் ஒரு சபை அங்கத்தினன் அவளைக்கண்டு ரசிப்பாள். அவள் கண்களுக்கு எவ்வளவு அழகாக காணப் பட்டாலும் எனக்குக் கவலையில்லை, சிந்திக்கும் மனிதன் எவனும் தலையைத் திருப்பிக் கொள்வான். ஏன்-? அவன் தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து வந்தவன். அவளை அவன் இச்சையோடு பார்த்தால், அவன் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று என்பதை அறிந்திருக்கிறான். அவள் அழகாயிருக்கிறாள் என்று அவன் நினைப்பதில்லை. ''அவள் அழகியல்லவா-?'' அவனைப் பொறுத்தவரையில் அவள் அழகியல்ல. சிந்திக்கும் மனிதன் ஒருவனுக்கு அவள் அசுத்தமுள்ள, பரிதபிக்கப்படத்தக்க, இழிவான யேசபேலாக காட்சி அளிக்கிறாள். அவளுடைய குடும்பத்தில் அவனும் உள்ளதால், தேவனுடைய குமாரன் வெட்கி தலை குனிகிறான். அது உண்மை, ''அவள் என் கூடப் பிறந்த சகோதரியாயிருந்து ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்-? பாருங்கள்-? 90. அவள் ஒருவகையான வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து வந்தாள். அவனோ வேறொரு வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து வந்தவன். அவள் அழகியென்று அவன் கருதுவதில்லை, இல்லவே இல்லை. உண்மை-யான தேவனுடைய மனிதன் எவனுக்கும் அது அழகு அல்ல. 91. இதை ஞாபகம் கொள்ளுங்கள். இயேசுகிறிஸ்துவின். இரத்தம் வடிகட்டும் பொருளாக ஆவதற்கு வெகு காலத்துக்கு முன்பு ஒரு சமயம், அதற்கு இன்னும் சில நிமிடங்களில் நாம் வருவோம். தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்க-ளுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள் (ஆதி.6: 2). தேவன் அதை மறக்கவேயில்லை. மறுபடியுமாக இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பிரயாணப்பட்டு சென்று கொண்டிருந்தபோது அது நடந்தது (எண்.25:1). அவர்கள் ஒவ்வொருவரும் அழிந்து போனார்கள். சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள், 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்தது. நான் கூட்டத்தை விட்டு ஒரு இரவு வெளியே வந்தபோது, ஒரு 'ரிக்கி' கட்டிடத்துக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். அவன் என்னிடம், ''நீர் அப்படி கூறுவதற்கு காரணம், உமக்கு வயதாகி விட்டது. அவர்கள் காண்பதற்கு அழகாயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்'' என்றேன். "நீ அப்படி சொல்வாய் என்று எனக்குத் தெரியும்'' என்றேன். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவன் எப்படிப்பட்டவன் என்று கூறவிடலாம். நான், 'உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். உனக்கு வயதென்ன?' என்று கேட்டேன். அவன், ''சுமார் முப்பது வயது' என்றான். 92. '' நான் உன்னை விட, பதினைந்து வயது இளையவனாயிருந்த போதும், இப்பொழுது நினைப்பதையே அப்பொழுதும். நினைத்தேன்,'' என்றேன். உண்மை-! அது எக்காலத்தும் அசுத்தமானது-! ''சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்" 93. கவனியுங்கள், அவனுடைய சிந்தனை மாத்திரம் தேவனுடைய வடி கட்டும் பொருளாகிய தேவனுடைய வார்த்தையின் மூலம் வடிகட்டப் பட்டிருந்தால், அவன் அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான், அவள் அழகியென்று நினைக்க மாட்டான். அவள் ஒரு யேசபேல் என்றே நினைப்பான். அவளுடைய சிகப்பு உதடுகளுக்குப் பின்னால் விஷப்பற்கள் உண்டு என்றும், அவை அவனைக் கடித்து விடுமென்றும் அவன்' நினைப்பான். அவளுடைய வாசல்கள் பாதாளத்தின் வாசல்கள். அடிக்கப்-படும்படியாக கொண்டு போகப்படுகிற காளையைப் போல் ஒரு மனிதன் அதற்குள் பிரவேசிக்கிறான்," என்று வேதம் கூறுகின்றது. அதுவே சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள். 94. நீ எதை விரும்புகிறாய்-? அவ்விதமாக உடுத்திக் கொண்டு ஒரு பெண் தெருவில் நடந்து செல்லும் போது, தலையைத் திருப்பி அவளை உற்றுப் பார்க்கும் மனிதனே, நீ சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளை உபயோகிக்கிறதில்லை. ஏனெனில், "ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்து ஆயிற்று' என்று வேதம் கூறுகின்றது (மத்.5:28), சிந்திக்கும் மனிதனே, உன் தலையை மறுபக்கம் திருப்பிக்கொள்-! அவளை விட்டு விலகிச்செல். அவள் அழகியல்ல, அவள் சர்ப்பம். அது உண்மை. அவள் சர்ப்பத்தைப் போல் நெளிகிறாள், சர்ப்பத்தைப் போல் நடந்து கொள்கிறாள்; சர்ப்பத்தைப் போல் கடிக்கிறாள். அவளை விட்டு விலகு. 95. ஓ. ஆமாம் தேவனுடைய வார்த்தை சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளாய் உள்ளது. அது எவருக்கும் தெரியும். அதன் வழியாகத் தான் உன் ஆத்துமா கட்டப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தையின் வழியாக அது உன்னை... நீ தேவனின் வழியாக வரும் போது... சிந்திக்கும் மனிதன் தேவ னுடைய வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து வரும் போது, அது அவனுக்கு பரிசுத்த மனிதனின் ருசியை அளிக்கிறது. அது உண்மை. நீ தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து வரும் போது, உன் ருசி பரிசுத்த மனிதனின் ருசியாயுள்ளது. அது நீதிமானின் ருசியாகிவிடுகிறது. அந்த சுலோகம் நிச்சயமாக சரி தான். 96. இது முன்னடையாளமாக இஸ்ரவேலில், இஸ்ரவேல் சபையோருக்கு மாத்திரம் செய்யப்பட்டதென்று நாம் காண்கிறோம்... அதனால் தான், இப்படி நான் பேசும் போது, போதகர்கள் நான் கூறும் எதனுடனும் இணங்காமற் போனால், இதை தேவன் எனக்களித்துள்ள சபைக்கு மாத்திரமே போதிக்கிறேன் என்பதை அறிவுறுத்த விரும்புறேன், 97. கவனியுங்கள், யாத்திராகமம் 19-ல் நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்களுக்கு நேரம் உள்ள போது, இந்த அதிகாரத்தை நீங்கள் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், கவனியுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்த போது, அவர்கள் முதலில் நுகத்துக்கு உட்படாத சிவப்பான ஒரு கிடாரியைக் கொண்டு வந்தனர். (இது எண்ணாகமம் 19-ல் கூறப்பட்டுள்ளது-தமிழாக்கி யோன்), அதன் அர்த்தம் என்னவென்றால், அது எதனுடனும் நுகத்தடியில் பிணைக்கப் படவில்லை. அது சிவப்பாயிருக்க வேண்டும். சிவப்பு பாவ நிவாரணத்தின் நிறம், சிவப்பு நிறத்தின் வழியாக சிவப்பு நிறத்தைக் கண்டால், அது வெள்ளை நிறமாகக் காணப்படும் என்று விஞ்ஞானம் அறிந்துள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா-? 98. சிவப்பு நிறத்தை சிவப்பு நிறத்தின் வழியாக பார்த்தால், அது வெள்ளை-யாய் இருக்கும். அவர் கர்த்தராகிய இயேசுவின் சிவப்பு நிற இரத்தத்தின் வழியாக சிவப்பான நமது பாவங்களைக் காணும்போது, அது உறைந்த மழையைப் போல் வெண்மையாகி விடுகிறது. சிவப்பின் வழியாக சிவப்பு. இஸ்ரவேல் சபையோரால் அந்த கிடாரி சாயங் கால நேரத்தில் கொல்லப் பட்டது. அதன் இரத்தத்தை எடுத்து. இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பிரவேசிக்கின்ற வாசலின் மேல் ஏழு பட்டைகள் பூசினர். இரத்தத்தின் மூலம் ஏழு சபை காலங்களில் மீட்கப்பட்டவர்களுக்கு ஒரு முன்னடையாளம். 99. அதன் பின்பு அதன் உடல் கொண்டு போகப்பட்டு சுட்டெரிக்கப்பட்டது. அதன் குளம்புகளும், தோலும், குடல்களும், சாணியும் கூட சுட்டெரிக்கப் பட்டது. அவையனைத்தும் ஒருமித்து' சுட்டெரிக்கப்பட்டன. பிறகு சுத்தமாய் இருக்கிற ஒருவன் அதன் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்ட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களின் மூலம் அளிக்கப்பட்ட முன்னடையாளத்தை மாத்திரம் ஒருவர் புரிந்து கொள்ளக் கூடுமானால், தேவனுடைய வார்த்தையானது அவிசுவாசம் கொண்ட அசுத்தமான கைகளால் கையாளப்படக் கூடாது, அது சுத்தமுள்ள மனிதனாக இருக்க வேண்டும். அவன் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால், அவன் தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து வந்திருக்க வேண்டும். சுத்தமுள்ள மனிதன். சுத்தமுள்ள கைகள்-! அது சுத்தமான இடத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். யேசபேல்களும், ரிக்கிகளும் இராப் போஜனத்தில் பங்கு கொண்டு, மற்றவர்களுடைய மனைவிகளுடனும் கணவர்களுடனும் சென்று சல்லாபம் செய்து, எல்லா விதமான அசுத்தமும் நிறைந்ததாய். நடனங்களுக்கும், விருந்துகளுக்கும் சென்று, குட்டை தலை மயிர் வைத்து கொண்டு, குட்டை கால்சட்டை அணிந்து, மற்றெல்லாவற் றையும் செய்து, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் உள்ள இடத்தில் அல்ல. அது சுத்தமான இடத்தில் வைக்கப்பட்டு, சுத்தமான கைகளால் கையாளப்பட வேண்டும். 100. இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்து, தங்கள் பாவத்தை அவர்கள் உணர்ந்த போது, இந்த கிடாரியின் சாம்பல் அவர்கள் மேல் தெளிக்கப்பட்டது. அதுவே தீட்டுக்கழிக்கும் ஜலமாக அமைந்து அவர்கள் பாவத்தைப் பரிகரித்தது. 101. கவனியுங்கள், அது இங்கு உள்ளது-! இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஆராதிப்பதற்கென ஐக்கியத்திற்குள் வருவதற்கு முன்பு, அவர்கள் முதலாவ-தாக தீட்டுக் கழிக்கும் ஜலத்தின் வழியாக (ஆங்கிலத்தில் waters of separation-அவர்களைப் பிரிக்கும் தண்ணீர் - தமிழாக்கியோன்) கடந்து வர வேண்டும், விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல். விசுவாசம் கேள்வியினால் வரும்- தேவனுடைய வசனத்தைக் கேட்பதால், அவர்கள் அந்த இரத்தத்தின் ஏழு பட்டைகளின் கீழ் சபைக்குள் பிரவேசித்தனர். அவர்களுடைய பாவங்களுக்காக ஏதோ ஒன்று மரித்தது என்பதை அது காண்பித்தது. அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டதன் மூலம் பிரிக்கப்பட்டனர். பிரிக்கும் தண்ணீர் (தீட்டுக் கழிக்கும் ஜலம்) அதன் பிறகு அவர்கள் ஐக்கியத்தில் பிரவேசித்தனர், 102. தேவன் மனிதனை சந்தித்த ஒரே இடம் அந்த ஒழுங்கின் பின்னால் மாத்திரமே. அவர், அவனை வேறெங்கும் சந்திக்க மாட்டார். அவன் அந்த ஒழுங்கை பின்பற்றி வரவேண்டும். தேவன் இஸ்ரவேல் ஜனங்களை ஒரு இடத்தில் மாத்திரமே சந்திக்தார். தேவன் இன்று உங்களை ஒரு இடத்தில் மாத்திரமே சந்திக்கிறார். அதுதான் இயேசு கிறிஸ்து. அவர் வார்த்தையாயிருக் கிறார். பிரிக்கும் தண்ணீர். அவருடைய இரத்தம் ஏழு சபை காலங்கள் அனைத்திற்காகவும் சிந்தப்பட்டது. பிறகு நாம் பரிசுத்த ஆவியின் மூலம் அந்த ஐக்கியத்திற்குள் பிரவேசிக்கிறோம். அது சபைக்கு மாத்திரமே அருளப்பட்டது. ஓ. அவர் எவ்வளவு மகத்துவமுள்ளவராயிருக்கிறார்-! 103. இப்பொழுது நாம் எபேசியர்.5:26-ஐப் பார்ப்போம். அங்கு திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தி கரிக்கப்படுவதைக் குறித்து கூறப்பட்டு உள்ளது. பிரிக்கும் தண்ணீர். அது என்ன செய்கிறது-? வார்த்தை தான் தேவனுடைய வடிகட்டும் பொருள். பிரிக்கும் தண்ணீர். தேவனுடைய வடிகட்டும் பொருளாகிய திருவசனத்தைக் கொண்டு, பிரிக்கும் தண்ணீரைக் கொண்டு சுத்திகரிக்கப்படுதல். 104. அப்படியானால் நீ சபையின் வடிகட்டும் பொருளின் வழியாக கிறிஸ்துவுக்குள் வரமுடியாது. ஒரு ஸ்தாபனத்தின் வடிகட்டும் பொருளின் வழியாகவோ அல்லது ஒரு கோட்பாட்டின் வடிகட்டும் பொருளின் வழியாக-வோ நீ வரமுடியாது. அந்த பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே நீ பிரவேசிக்க வேண்டுமானால், அதற்கு ஒரு வடிகட்டும் பொருள் மாத்திரமே உண்டு. அது தான் திருவசனமாகிய தண்ணீரினால் சுத்திகரிக்கப்படுவதன் மூலமாக வருதல். தேவனுடைய வார்த்தையே சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள். 105. நீ ஒரு நல்ல அங்கத்தினனா இல்லையாவென்று சபை உன்னை சீர் தூக்கி பார்க்கும். அவர்கள் உனக்கு நல்லடக்க ஆராதனையை நடத்தி, உன் மரணத்தின்போது கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டு, மலர் வளையம் வைத்து எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் உன் ஆத்துமா தேவனை சந்திக்க வேண்டும் என்னும் நிலைமை வரும் போது, அது நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். அது நித்திய ஜீவனாயிருக்குமானால் அது வார்த்தையின் ஒரு பாகமாக இருக்கும். என் சொந்த வார்த்தை, என். சொந்த கை, என் கையை மறுதலிக்க முடியாதது போல, என் கை, என் பாதங்கள், என் கால் விரல்கள், என் உடலின் எந்த பாகத்தையும் என் கண்கள் மறுதலிக்க முடியாது. அவ்வாறே தேவனுடைய வார்த்தையின் ஒரு பாகமாயுள்ள எந்த மனிதனும். எந்த ஸ்திரியும் தேவனுடைய வார்த்தையின் ஒரு பாகத்தையும் கூட மறுதலிக்க முடியாது. அப்படியானால், பெண்களே, நீங்கள் குட்டை தலைமயிருடன் தேவனுடைய சமூகத்துக்கு வரும் போது. நீங்கள் தவறு செய்கிறீர்கள். உங்களுக்குப் புரிகிறதா-? நீங்கள் தவறு செய்கிறீர்கள். அந்நிலையில் நீங்கள் தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து வந்து, திருவசனம் என்னும் தண்ணீரினால் கழுவப்பட முடியாது. அப்படி கழுவப்பட்டால் தான் நீங்கள் ஐக்கியத்துக்குள் பிரவேசிக்க முடியும். நீங்கள் ஐக்கியத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் வார்த்தையின் வழியாக வரும் வரைக்கும் ஐக்கியத்திற்குள் இருக்க முடியாது. தேவனுடைய வார்த்தையின் ஒவ்வொரு சிறு புள்ளியும். சிறு பாகமும்... "மனுஷன் அப்பத்தினாலே மாத்திர மல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.'' அது அந்த வடிகட்டும் பொருளின் வழியாய் கடந்து வரவேண்டும். அது நீதிமானுக்கு ருசியை அளிக்கிறது. ஏனெனில் அதை தான் அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனைச் சுத்திகரிக்க ஏதாவதொன்றை... 106. வார்த்தை. தேவனுடைய வார்த்தையே சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள், அது நீதிமானின் ருசியை அளிக்கிறது. அது உண்மையென்று நாமறிவோம். அது எல்லா பாவத்தையும் அவிசுவாசத்தையும் வடிகட்டி விடுகிறது. அந்த வடிகட்டும் பொருளின் வழியாக நீங்கள் வரும்போது, அதன் பிறகு அவிசுவாசம் ஒரு போதும் கிடையாது. ஏனெனில் அது உண்மையான விசுவாசியின் ருசியாய் அமைந்துள்ளது. 107. உண்மையான விசுவாசி என்னவானாலும் சரியாயிருக்க விரும்புகிறான். நான் இந்த சமுதாயத்தில் மேன்மை தங்கியவன், இந்த நகரத்தில் உள்ள மிகப் பெரிய சபையில் நான் அங்கத்தினனாயிருக்கிறேன்'' என்று அவன் கூற விரும்புவதில்லை. அது ஒரு மூலையில் ஒரு ஸ்தாபனமாக இருந்தாலும், அல்லது எங்காவது ஒரு சிறிய துறைமுகமாயிருந்தாலும் எனக்குக் கவலை இல்லை, சிந்திக்கும் மனிதன், தான் தேவனைச் சந்திக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறான். சபை என்ன கூறினாலும், மற்றவர் என்ன கூறினாலும், அவன் தேவனுடைய நிபந்தனைகளுக்கு உட்படவேண்டும். தேவனுடைய நிபந்தனைகள் தேவனுடைய வார்த்தையே. நல்லது, தேவனுடைய வார்த்தை-!'' என்று அவர்கள் கூறுகின்றனர். நிச்சயமாக எல்லோருமே அது தேவனுடைய வார்த்தையென்று விசுவாசிக்கி- ன்றனர். ஆனால் அதன் வழியாக நீங்கள் வடிகட்டும் போது, குட்டை தலை மயிர் வைத்துள்ள பெண் எப்படி கடந்து செல்ல முடியும்-? நீங்கள் எப்படி செய்யப் போகிறீர்கள்-? இந்த உபதேசத்தை ஆதரிக்க விரும்பும் ஒரு மனிதனை நீங்கள் எவ்வாறு அதன் வழியாக கடக்கச்செய்யப் போகின்றீர்கள்-? பாருங்கள்-? அது சிந்திக்கும் மனிதனின் ருசியல்லவே. இல்லை-! அப்படிப்பட்ட ஒன்றில் இறங்குவதற்கு முன்பு சிந்திக்கும் மனிதன் இருமுறை சிந்திப்பான். 108. கவனியுங்கள், வார்த்தை தன்னைத் தானே மறுதலிக்க முடியாது. அது திருப்திபடுமானால் அது விருப்பம். .அது எதை விரும்புகிறது முதலாவதாக நீங்கள் அதை விரும்பும்படி செய்வது எது-? ஏனெனில் உங்கள் ஆத்துமாவின் உள்ளில் முன் குறிக்கப்பட்ட வித்து இருந்தது. அது நித்திய ஜீவன். அது எப்பொழுதும் அங்கேயே இருந்தது எப்பொழுதும் அங்கிருந்தது. ''பிதாவான- வர் எனக்கு கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், அவர்கள் ஒருவராவது இழந்து போவதில்லை.'' 109, '' சிந்திக்கும் மனிதனின் ருசி, சிந்திக்கும் மனிதன் தேவனுடைய வசனத்தைக் கேட்கும் போது. ''என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கிறது. அவைகள் அந்தியனுக்குப் பின் செல்வதில்லை'' (யோவான் 10:27,5). ஏனெனில் அங்கே கீழே, ஜீவனுள்ளது. ஜீவன் ஜீவனுடன் இணைகிறது. பாவம் பாவத்துடன் இணைகிறது. பாவம் மிகவும் மாய்மாலமான ஒன்று, அது இரட்சிக்கப்படாமலே, தான் இரட்சிக்கப்பட்டதாக எண்ணிக் கொள்கிறது. அதுவே மாய்மாலத்தின் மிகுந்த ஆழம். 110. சபை அங்கத்தினர்கள் தங்கள் விருப்பப்படி செய்து அதே சமயத்தில் பக்தியுள்ளவர்கள் என்று அழைக்கப்பட, அவர்களுக்கு ஸ்தாபனத்தின் வடி கட்டும் பொருள் அவசியமாயுள்ளது. "ஓ. அவர் மிகவும் பக்தியுள்ளவர்'' என்று அவர்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். 111. நான் ஒரு நாள் ஆப்பிரிக்காவுக்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த சிறுவர்களும் சிறுமிகளும் எல்விஸ்-பிரஸ்லி. பாட் பூன், ரிக்கி நெல்ஸன், இன்னும் மற்றவர்கள் பாடியுள்ள ராக் அண்டு ரோல் பாடல்களைக் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். நான், ''அவர்கள் துரோகிகள்' என்றேன். அப்பொழுது ஒரு சிறு பெண், அவர் மிகவும் பக்தியுள்ளவர்'' என்றாள். 112. நான், 'யூதாஸ்-யும் கூட. யூதாஸ் முப்பது வெள்ளி காசுகளை மாத்திரமே வாங்கினான். எல்விஸ்-பிரஸ்லியோ கோடிக்கணக்கான டாலர்கள் வாங்கினான்'' என்றேன். பாருங்கள்-? நான். ''அவர்கள் ஒன்றுமில்லை, அவர்கள் தேசம் பெற்றுள்ள மிகவும் மோசமான கடன்காரர்கள்,'' என்றேன். இருப்பினும் அவர்கள் சிகரெட்டின் வடிகட்டும் பொருளைப் போன்று ஏமாற்றக் கூடியவர்களாக இருக்கின்றனர். இந்த ஸ்தாபனங்கள் தாம் அவர்களை அங்கத்தினர்களாக உள்ளே அனுமதித்தன. அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கவே கூடாது. அவர்கள் பக்திப்பாடல்களைப் பாடக் கூடாதென்று சட்டம் விதிக்கப்பட வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்வது சட்ட விரோதமான செயலாகக் கருதப்பட வேண்டும். ஆனால் எல்லாமே ஒரு பெரிய மாய்மாலக் குவியலாக ஆகிவிட்டது. அவர்கள் அதில் தான் நிலைத்திருக்கின்றனர். ஆத்துமாவுக்காக உள்ள உண்மையான வடிகட்டும் பொருள், நீங்கள் உலகத்தி லும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், உங்களிடத்தில் தேவனின் அன்பு சிறிதளவும் கூட இல்லை" என்று கூறும் (1-யோவான் 2:15). 113. நீங்கள் ராக் அண்டு ரோல் தேவனால் உண்டானது. என்று கூறமுடியாது. ராக் அண்டு ரோல் உலகத்தைச் சேர்ந்தது. இந்த நடனங்களும் அசுத்தமான காரியங்களும் உலகத்தைச் சேர்ந்தவை. இவையனைத்தும் உலகத்தைச் சேர்ந்தவை. டெண் வைத்துள்ள குட்டை தலைமயிர் தேவனால் உண்டானது என்று நீங்கள் கூறமுடியாது. அது தேவனால் உண்டானதல்ல என்று வேதம் கூறுகிறது. எனவே அது உலகத்தின் அசுத்தம். நீங்கள் உலகத்தின் ஒரு சிறு அணுவிலும் அன்பு கூர்ந்தாலும், உங்களிடத்தில் தேவனின் அன்பு சிறிதளவும் கூட இல்லை, 114. பாருங்கள் எது ... நல்லது, எது இழுக்கிறது-? உங்களுக்குள் கீழே உள்ள ஒன்று இழுக்கிறது. வெளிப்புறத்தின் வழியாக ஆவியின் வழியாக, உங்கள் ஆத்துமா உள்ளே இழுத்துக்கொள்கிறது. உங்கள் ஆத்துமா உலகத்தில் அன்பு கூர்ந்தால், அது மரித்துவிட்டது. அது வெளியே எவ்வளவு அபிஷேகம் பெற்றி ருந்தாலும், எவ்வளவு நீதியுள்ளதாக காணப்பட்டாலும், எனக்குக் கவலை இல்லை. அது உள்ளே மரித்து விட்டது. ஒருவன் உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் தேவனின் அன்பில்லை.'- அவன் எவ்வளவு பக்தியுள்ளவனாக இருந்தாலும். 115. உண்மையான வடிகட்டும் பொருள் இவையனைத்தையும் உள்ளே புகாதபடி வடிகட்டிவிட்டு, தேவனுடைய உண்மைத்துவமான வார்த்தையை மாத்திரம் உண்மையான ஆத்துமாவுக்குள் செலுத்தும். 116. அவர்கள் ஏசாவைப் போல் வெளிப்புறத்தில் சரியாக இருக்கின்றனர். ஏசா வெளிப்புறத்தில் பக்தியுள்ளவனாக இருந்தான். மார்க்க சம்பந்தமான விஷயத்- தில் அவன் யாக்கோபைக் காட்டிலும் அதிக பக்தியுள்ளவனாகக் காணப்- பட்டான். யாக்கோபைப் பார்க்கிலும் அவன் சிறந்தவன் போல் தோன்றினது. ஆனால் உட்புறத்திலோ அவன் வேறு விதமாக இருந்தான். வெளிப்புறத்தில் அவன் பக்தியுள்ளவனாக காணப்பட்டான். ஆனால் அவனுடைய சிந்தனை வடிகட்டப்படவில்லை. அவனுடைய சேஷ்ட புத்திரபாகத்தைக் குறித்து அவன் சரியான 'கருத்தைக் கொண்டிருக்கவில்லை. சேஷ்ட புத்திரபாகம் முக்கியம் வாய்ந்தது என்று தேவன் கூறியிருந்தார். ஆனால் அவனோ, 'நான் பசியாயிருக்கும் போது. என் சேஷ்டபுத்திரபாகத்தினால் என்ன பயன்-? உனக்கு விருப்பமானால், அதை எடுத்துக்கொள்,'' என்றான். ஓ. என்னே, பாருங்கள், ''நான் ஆலயத்துக்குச் செல்கிறேன். உன் போலவே நானும் நல்லவன்-! என் ஸ்தாபனமும்... அது உலகிலுள்ள மிகப்பெரிய ஸ்தாபனங்களில் ஒன்று. என் தாயார் அதைச் சேர்ந்திருந்தார்கள், என் தந்தை அதை சேர்ந்திருந்தார். இது, அது. மற்றது. என் போதகர் கல்வி கற்றவர். அவர் இன்னின்ன பட்டங்களைப் பெற்றிருக்கிறார். அது அவரை தேவனிடமிருந்து அவ்வளவு தூரம் விலக்கி உள்ளது. அது சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் அல்ல. அப்படி இருக்குமானால், கையெழுத்து போடவும் கூட அறியாத பேதுரு, எப்படி அந்நிலையை வகிக்க முடிந்தது-? அவனோ சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளைப் பெற்றிருந்தான், 117. கவனியுங்கள். ஓ. என்னே-! தேவன் சொன்னது போல சேஷ்ட புத்திர பாகம் மரணத்துக்கும் ஜீவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உண்டாக்கும் ஒன்றல்ல என்று ஏசா கருதினான். அவ்வாறே ஏவாளும் யூதாஸம் நாகரீகத்தின் அறிவை ருசி பார்த்து திருப்தியடைவதற்காக தங்கள் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போட்டனர். அதற்காகத் தான் ஏவாள் தன் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப்போட்டாள். விஞ்ஞானத்தின் சிறு ருசிக்காக, உலக ஞானத்தின் ஒரு சிறு ருசிக்காக, சற்று மேலான சபைக்காக, இன்று அழைக்கப்படுவது போல், சற்று மேலான வகுப்பினருக்காக. பாருங்கள்-? யூதாஸ் தன் பிறப்புரிமையை முப்பது வெள்ளிக்காசுக்கு விற்றுப் போட்டு, கூடுதலாக சில டாலர்கள் சம்பாதித்தான். ''என் சபையோர் இங்கு எனக்கு அதிக சம்பளம் கொடுக்க முடியும். எனவே நான் இங்கிருந்து கொண்டு பிரசங்கிப்பேன்'' பாருங்கள்-? ''எனவே நான் ஒரு போதகராக ஆனால்...." 118. அவர்கள், சகோ.பிரான்ஹாமே, செய்தி உண்மை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டால், நாங்கள் எங்கு பிரசங்கிப்பது-?' என்று என்னைக் கேட்டனர். உலகத்தில், சகோதரனே, அது தான் நமது சபை. நிச்சயமாக. சகோதரர் எவரும் என்னை ஆதரிக்க மாட்டாரே-!' எந்த சகோதரனும் என்னை ஆதரிக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. இயேசுகிறிஸ்து என்னை ஆதரிக்க வேண்டுமென்று நான் எதிர் பார்க்கிறேன். ஏனெனில் அவர் தாம் அதில் உறுதியாக நின்றார். அவர் தாம் அதைக் கூறினார், 119. உண்மையான பிறப்புரிமை, இரத்தம், வார்த்தையினால் வடிகட்டப்பட்டு, எல்லா பாவமும், உலகமும், சபையும் ஸ்தாபனங்களும், பிரிவினைகளும் புறம்பாக்கப்படுமானால்... சிந்திக்கும் மனிதன் ஒருவன், தேவனுடைய பார்வையில் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளாகக் கருதப்படும் ஒன்றை தெரிந்து கொள்வானானால், கல்வி, நாகரீகம், சபை ஸ்தாபனம், முறைமை. எல்லா வகையான பாவமும் புறம்பாக்கப்படும். 120, ஒரு மனிதன் தன் ஜீவனை தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக இழுத்துக் கொள்வானானால், ஒன்றுமே அதில் விடப்படுவதில்லை. கவனியுங்கள்-! உங்கள் வாழ்க்கை பாவத்தில் உழன்று கொண்டிருந்தது. ஏனெனில் நீங்கள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களாய் இவ்வுலகில் தோன்றினீர்கள், சகோ.மக்கல்லி வழக்கமாக கூறுவது போன்று நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். எனக்கு செவி கொடுத்து கேளுங்கள். 121. நீங்கள் இவ்வுலகிற்கு வந்தபோது, நீங்கள் பாவத்தில் பிறந்தீர்கள். நீங்கள் போராடி ஜெயிக்கக்கூடிய தருணத்துடன் வரவில்லை. நீங்கள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களாய் இவ்வுலகிற்கு வந்தீர்கள். உங்கள் ஆவிக்குள் பாவம் செய்ய வேண்டுமெனும் விருப்பம் குடி கொண்டிருந்தது. நீங்கள் பாவத்தை நேசித்தீர்கள். ஏனெனில் நீங்கள் பாவத்தில் பிறந்தீர்கள். உங்களுக்கு எந்த தருணமும் அளிக்கப்படவில்லை. ஆனால் உங்களுக்குள் எங்கோ ஓரிடத்தில் (இதோ நீங்கள் வருகிறீர்கள்-!) இழுக்கக்கூடிய ஏதோ ஒன்று இருந்தது. தேவன் எங்கோ இருக்கிறார் என்று அது உங்களிடம் கூறினது. நீங்களும் அறிந்து கொண்டீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தை-யைப் படித்தீர்கள், ஆலயத்துக்கு சென்றீர்கள், அவர்கள் அங்கு கூறின கருத்துக்கள் மேலானவை என்று உங்களிடம் கூறப்பட்ட போது, அவைகளை ஏற்றுக் கொண்டீர்கள். அப்பொழுது நீங்கள் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளை உபயோகிக்கவில்லை. நீங்கள் தேவனுடைய வடிகட்டும் பொருளை உபயோகிக்கும் போது - அதுவே சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள். எல்லா வடிகட்டும் பொருட்களும் ஒழிந்து போகும், என்னுடையதோ ஒழிந்து போகாது-!'' நீங்கள் தேவனுடைய வடிகட்டும் பொருளை உபயோகித்து, உங்கள் ஜீவனை இழுத்துக் கொள்ளும் போது. உங்கள் விருப்பங்கள். உங்கள் விருப்பங்களை நீங்கள் தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக, அதாவது சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளின் வழியாக பெற்றுக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியைத் தவிர வேறொன்றும் இருக்காது . 122. உங்களுக்கு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி வேண்டுமென்றால், இது தான் அது. உங்கள் ஆத்துமா எல்லா வகையிலும் தேவனுடைய வார்த்தையுடன் இணைந்திருக்குமானால், நீங்கள் உங்கள் ஜீவனை சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளின் வழியாக, தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக. பெற்றுக் கொண்டீர்கள் என்பதை அது காண்பிக்கின்றது. 123. கவனியுங்கள், அது தேவனுடைய வடிகட்டும் பொருளா-? நாம் திரு வசனமாகிய தண்ணீரினால் கழுவப்பட்டோம் என்று அவர் கூறியுள்ளார். தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏதேன் தோட்டத்தில் ஒரு வடிகட்டும் பொருளை அளித்து, "இவை ஒன்றையும் அதன் வழியாக பெற்றுக்கொள்ள வேண்டாம்' என்றார். ஆனால் சாத்தானோ அதில் ஒரு துளை உண்டாக்கி, "ஓ.. அது.... அதில் சிறிது பெறுவதனால் பாதகமில்லை'' என்றான். 124. மானிட வர்க்கத்தை மரணம் ஆட்கொள்ள ஒரு துளி மாத்திரமே போதுமானதாயிருந்தது. அவ்வளவு தான் அதற்கு தேவை, நிக்கோடினை ஒரு முறை ருசிபார்த்தல், அத்துடன் அவர்கள் போய்விட்டனர். 125. பரிசுத்த ஆவியைத் தவிர வேறொன்றும் அங்கு இருப்பதில்லை. 126. உங்களுக்குள் முன் குறிக்கப்பட்ட வித்து இருந்து கொண்டு, அது உங்களைத் தேவனுக்காக பசி கொள்ளச் செய்தது என்பதை அது காண்பிக்கின்றது. "மீட்பதற்கென்று தேவன் எனக்குத் தந்தவை யாவும் என்னுடன் கல்வாரியில் மரித்து, நான் உயிர்த்தெழுந்த போது என்னுடன் உயிர்த்தெழுந்தன, அவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், அவர்கள் சரீரத்தில் பொருத்தப்படுவார்கள் (பாதமோ, கையோ, மூக்கோ, வாயோ, எதுவாயிருந்தாலும்) அவர்கள் அதில் பொருத்தப்படுவார்கள். அவர்களுடைய காலத்தில் அவர்கள் என்னிடத்தில் வருவார்கள்''. 127. ஓ. என்னே-! அது தான் உண்மையான வடிகட்டுதல். உலகத்திலுள்ள எல்லா பாவமும். உலகத்தின் பேரிலுள்ள சிநேகமும் மரித்து போன பின்பு. இந்த ஆத்துமா ஒன்றே ஒன்றை தன்னிடம் இழுத்துக் கொள்கின்றது. அது இங்கு உள்ளது. அதை மறந்து போகவேண்டாம்-! தொலைபேசியில் இணைக்கப்பட்டுள்ளவர்களே, இதை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். சிந்திக்கும் மனிதன் ஒருவன், அவன் யாருக்கு முன்னால் நிற்கப் போகிறான் என்றும், தேவனுடைய வார்த்தை என்னவென்றும் சிந்தித்துப் பார்த்து, அதன் வழியாக தன்னிடம் இழுத்துக் கொள்ளும் போது, பரிசுத்த ஆவியைத் தவிர வேறொன்றுமே அதன் வழியாக வரமுடியாது, அது என்ன-? அது ஜீவன், துவக்கத்திலிருந்தே வார்த்தை வித்து, நீ துவக்கத்-திலேயே தேவனுக்குள் இருந்தாய், இங்கு நின்று கொண்டு வித்தின் ஜீவனை இழுத்துக் கொண்டிருக்கிறாய். வித்தானது முன் குறித்தலின் மூலம் உன் இருதயத்திலுள்ளது-! அல்லேலூயா-! தேவனுடைய முன் அறிவின்படி வித்து ஏற்கனவே அங்கிருக்க முன் குறிக்கப்பட்டது. அது தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் போது, வார்த்தையின் வழியாகத் தவிர வேறெதன் வழியாகவும் இழுத்துக் கொள்ள முடியாது. அப்பொழுது அது சிந்திக்கும் மனிதனின் ருசியாக, நீதிமானின் ருசியாக, இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதாகமத்தில் காணும் பரிசுத்த மனிதனின் ருசியாகி விடுகிறது. அந்த இடத்தில் வருவது, என்னவெனில் அந்த இருதயத்தில் வார்த்தை வந்து விடுகிறது. "நான்" உமக்கு விரோதமாய்ப் 'பாவம் செய்யாதபடிக்கு உமது வசனத்தை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்" (சங்.119:11) அது வார்தையின் மூலமாக தன்னிடம். எதை இழுத்துக்கொள்கிறது-? ஒன்றே ஒன்று மாத்திரம் வார்த்தையின் வழியாக சுடந்து வரமுடியும்; அது தான் பரிசுத்த ஆவி. பரிசுத்த ஆவி ஒன்று மாத்திரமே வார்த்தையின் வழியாக கடந்து வரமுடியும். சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் பரிசுத்த மனிதனுக்கு ருசியையளிக்கிறது. 128. அப்பொழுது அவன் பரலோக காரியங்களை ருசித்து விடுகிறான். அவனுடைய இருதயத்தில் அவன் வார்த்தையைப் பெற்றிருக்கிறான். அது அவன் முன்னால் வெளிப்படுவதை அவன் காண்கிறான். அவன் ஆத்துமா முழுவதுமே அதனால் சுற்றப்பட்டுள்ளது. அவனைச் சுற்றிலுமுள்ள உலகமும் மற்ற காரியங்களும் அவனுக்கு மரித்ததாய் உள்ளது. 129. சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் மார்க்கத்தை வடிகட்டுதல்... நான் மார்க்கத்தை வடிகட்டுதலைக் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் பரிசுத்த மனிதனின் ருசியை அளிக்குமானால் (பாருங்கள்?) அது பரிசுத்த மனிதனின் ருசியை திருப்தி படுத்தக் கூடியதாயுள்ளது. அவன் இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதைக் காண்கிறான், பார்த்தீர்களா-! அவர் முன்பு புரிந்த அதே செயல்களை இப்பொழுது நம் முன்னிலையில் செய்வதைக் காணும்போது. அது பரிசுத்த-மனிதனின் ருசியை, அவனுடைய யோசனையை, திருப்திபடுத்துகிறது. 130. அவன் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டான் என்பதை அவன் அப்பொழுது அறிந்து கொள்கிறான். அவன் அன்பு கூருகிறான். உலகத்தின் பேரிலுள்ள அவனுடைய அன்பு - வார்த்தை ஊர்ஜிதப்பட்டு உறுதிப்பட வேண்டுமென்று. அவன் விரும்புகிறான். ஒவ்வொரு காலத்திலும் அவன் அதற்காக காத்திருக்கிறான். ஏனெனில் அவன் பரிசுத்த மனிதன், தேவனைக் காணவேண்டுமென்ற விருப்பம் அவனுக்குள்ளது. மற்றவர்களோ சபையைச் சேர்ந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் இந்த மனிதனோ தேவனைக் காண விரும்புகிறான். அவன் அவரை ஒரு கொத்து கோட் பாடுகளில் காண்பதில்லை. அவன், அவரை பெரிய 'பைப்' ஆர்கன்களிலும், பெரிய ஆலயங்களிலும், உயரமான சிலுவைகளிலும், கழுத்துப் பட்டையைத் திருப்பி அணிந்துள்ள நாகரிகமான அறிவாளிகளிலும் காண்பதில்லை; அவன் அவரை வேத பண்டிதனில் காண்பதில்லை; அவன் அவரை வார்த்தை உறுதிப்படுவதில் மாத்திரம் காண்கிறான்: நான் அவரை காவல் தீயில் கண்டு இருக்கிறேன். என் கண்கள் கர்த்தருடைய வருகையின் மகிமையைக் கண்டன அவர் கோபாக்கினையின் திராட்சப்பழங்கள் சேகரிக்கப்பட்ட ஆலையை மிதித்துக் கொண்டிருக்கிறார் அவர், தமது பயங்கரமான வேகமான பட்டயத்தால் விசுவாசமுள்ள மின்னலை அவிழ்த்து விட்டார் அவருடைய சத்தியம் அணிவகுத்து முன்சென்று கொண்டிருக்கிறது (முடிவு வரைக்கும் அப்படியே செல்லும்! ஆம் ஐயர்!) 131. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா-? சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள். தேவனுடைய சமுகத்தில் நிற்க விரும்பும் மனிதன்... தேவனுடைய வடிகட்டும் பொருள் எது-? அவருடைய வார்த்தை, "நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.' இங்கு என்ன நடந்து கொண்டிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அந்த வார்த்தையை நீங்கள் கடந்து செல்ல வேண்டாம். திருவசனம் என்னும் தண்ணீரினால் கழுவப்படுதல் -சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள். ஒரு ஸ்தாபனம் அல்ல, ஒரு கோட்பாடு அல்ல, ஒரு சபை அல்ல, ஒரு ஆலயம் அல்ல. ஆனால் சிந்திக்கும் மனிதனின் வடி கட்டும் பொருள்-! ஏனெனில் நீங்கள் வார்த்தையைக் கொண்டு நியாயந் தீர்க்கப்படப் போகின்றீர்கள். சிந்திக்கும் மனிதன் அதை யோசித்துப் பார்ப்பான். புத்தியில்லாத மனிதன் உலகப் பிரகாரமான ருசியை அல்லது வேறெதாவதை அதற்கு பதிலாக ஏற்றுக்கொள்வான். உண்மையான ஒன்று இருக்கும் போது. ஏன் அதற்கு பதிலாக வேறொன்றைக் கொள்ள வேண்டும்? 132. யோசித்துப் பாருங்கள்-! ஒரு நிமிடம் சிந்தனை செய்து பாருங்கள், குட்டை மயிர் வைத்து, உதடுகளில் வர்ணம் தீட்டி உள்ள பெண் ஒருத்தி அந்நிய பாஷை பேசுகின்றாள். சபை அதை ஆதரித்து, அதை பரிசுத்த ஆவி பெற்ற தன் அத்தாட்சியாக எடுத்துக் கொள்கின்றது. 133. அல்லது ஏதோ ஒரு வேத பள்ளியில் படித்து வெளி வந்த போதகர் ஒருவர் திரித்துவ ஞானஸ்நானத்தை உபயோகித்து, சில கோட்பாடுகளுக்-காகவும் ஸ்தாபனத்துக்காகவும் வார்த்தையை விட்டுக் கொடுக்கிறார். அதுவா சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்-? சகோதரனே. எனக்கு தோன்ற வில்லை. அது புத்தியில்லாத மனிதன் அதன் வழியாக தன்னிடம் இழுத்துக் கொள்ளுதல். அது உண்மை. உங்களால் சிந்தித்து பார்க்க முடிகிறதா-? தன் ஆத்துமாவுக்காக தேவனுடைய வார்த்தையை வடிகட்டும் பொருளாக உபயோகிப்பதற்கு பதிலாக, கோட்பாடுகளும் ஸ்தாபானமும் அவன் மேல் குவியலாகக் குவிக்கப்பட அவன் அனுமதிக்கிறான். அதன் பிறகு அவன் மாசுபட்டு, மற்றவர்கள் அவனுக்குள் மனிதருடைய உபதேசங்களை நுழைக்க அவன் அனுமதித்து, தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் ஏறக் குறைய வஞ்சிக்கும் படியான செயலை அவன் புரிந்து, தன் ஆத்துமாவிடம் அவன் இழுத்துக் கொள்ளக்கூடிய வார்த்தையை அசட்டை செய்கிறான் - அங்கு இழுத்துக் கொள்ள ஏதாவதொன்று இருக்குமானால். ஆனால் முன் குறிக்கப் பட்ட வித்து (இதை காணத் தவற வேண்டாம்) அந்த முன் குறிக்கப்பட்ட வித்து அங்கு இல்லாமல் போனால், அது தன்னிடம் இழுத்துக் கொள்ளாது. ஏனெனில் தன் விருப்பங்களுக்காக மாத்திரம் அது இழுத்துக் கொள்ளும். 134. புகை பிடிக்கும் ஒரு மனிதனுக்கு, புகை பிடிக்கும் மனிதனின் ருசி தேவைபட்டால், அவன் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு... நான் அவனிடம், ''உன் விரலை உறிஞ்சு" என்று கூறி, அவனும் அங்கு நின்று கொண்டு தன் விரலை உறிஞ்சுவானானால், அவன், "அது மூடத்தனமான செயல்'' என்பான். ஏன்? அவனுடைய ருசி நிக்கோட்டினுக்காக. அவன் சிந்திக்கும் மனிதன் அல்ல. பாருங்கள்? 135. நீங்கள், "நான் ஒன்றையும் ருசிக்கவில்லை... நான் உலகத்தை ருசிக்க விரும்புகிறேன், நான் புகையிலையை ருசிக்க விரும்புகிறேன். நான் ஒன்றை-யுமே ருசிக்கவில்லை'' என்கிறீர்கள். அவனுக்கு ஒரு துணி உறிஞ்சியைக் கொடுங்கள் (clothes pin). அவன் அதை உறிஞ்சிக் கொண்டேயிருக்கட்டும். பாருங்கள்-? அவன் அதை உறிஞ்சிக் கொண்டு இருக்கட்டும். 136. அவன், "எனக்கு ஒரு ருசியும் கிடைக்கவில்லை" என்கிறான். பின்னை ஏன் அதை உறிஞ்சிக் கொண்டிருக்கிறாய்-? உனக்கு நிக்கோட்டினை ருசிக்க வேண்டுமெனும் விருப்பம் உள்ளது. நீ 'சபை' கோட்பாட்டை உறிஞ்சிக் கொண்டிருக்கிறாய், ஸ்திரீகளாகிய நீங்கள் இன்னும் குட்டைத் தலைமயிர் வைத்து முகங்களில் வர்ணம் தீட்டி, பாலுணர்ச்சியைத் தூண்டும் உடைகளை உடுத்துகிறீர்கள். மனிதர்களாகிய நீங்கள் அவர்களை உற்று நோக்கி இன்னும் மற்ற காரியங்களில் ஈடுபட்டு உங்கள் வழியில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். அது என்ன-? அங்கு என்ன உள்ளது. உலகம் இன்னமும் அங்குள்ளது. உங்களுக்கு ஒரு ருசி உள்ளது. அந்த ருசிக்காக நீங்கள் அதிலிருந்து இழுக்கிறீர்கள் 137. நான் இந்த சபைக்கு செல்லலாம், அங்கு அவர்கள் எதையுமே குறை கூறுவதில்லை. அவர்கள் இதைக் குறித்து ஒன்றும் கூறுவதில்லை. அதைக் குறித்து ஒன்றும் கூறுவதில்லை. இவைகளில் ஒன்றையும் குறித்து அங்கு பேசப்படுவதில்லை. எங்கள் போதகர் பரந்த மனதுடையவர். நாங்கள் அப்படிப் பட்ட காரியங்களைக் கூறுவதில்லை.'' அது என்ன-? உனக்கு உலகத்தின் ருசி உள்ளது. அதற்காக நீ உறிஞ்சிக் கொண்டிருக்கிறாய். உண்மை-!" 138. ஆனால் சிந்திக்கும் ஸ்திரீ அப்படிப்பட்ட ஒன்றைத் தெரிந்து கொள்வது இல்லை. அவள் பரிசுத்தமுள்ளவளாயிருக்க வேண்டுமென்று அறிந்து இருக்கிறாள். தேவனுடைய வார்த்தையின் வழியாக நீங்கள் இழுத்துக் கொள்ளக் கூடிய ஒன்றே ஒன்று ஆவியே. அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை, நீ வாழும் காலத்தில் இயேசுகிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்காக, உனக்குள் இருக்கும் வார்த்தை ஜீவிக்கும்படி செய்யும். அல்லேலுயா-! சகோதரனே, அது உண்மையல்ல என்றால், உண்மை என்ன என்று எனக்குத் தெரியவே தெரியாது. அது உண்மையல்லவென்றால். நான் புத்தி சுவாதீனத்தை இழந்து விட்டவனாயிருப்பேன். 139. முன்குறிக்கப்பட்டு உங்கள் இருதயத்திலுள்ள வார்த்தையே இழுக்கின்றது. அது உலகத்தை துப்பி விடுகிறது, அது அதற்குத் தேவையில்லை. அது வார்த்தையை அடையும் போது, அது இழுக்கத் துவங்குகிறது. அது வார்த்தையின் வழியாக இழுக்கும்போது, அது வார்த்தையை உயிர்ப்பிக்கும் பரிசுத்த ஆவியேயல்லாமல் வேறெதாகவும் இருக்க முடியாது. 140. அப்பொழுது சிந்திக்கும் பக்தியுள்ள மனிதனின் வடிகட்டும் பொருள் வார்த்தையே. அது அவனுடைய இருதயத்திலுள்ள பரிசுத்த ருசிக்கு திருப்தி அளிக்கிறது. ''சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள், பரிசுத்த மனிதனின் ருசி" ஓ, என்னே , நாம் எத்ற்குள் இருக்கிறோம். 141, அவனுடைய ஆத்துமாவுக்காக அவன் தேவனுடைய வடிகட்டும் பொருளை உபயோகிப்பதற்கு பதிலாக, ஏதோ ஸ்தாபனம் அல்லது கோட்-பாட்டின் மூலமாக சாத்தான் அவனை ஏமாற்ற அவன் அனுமதிக்கிறான். சிகரெட்டு பிடிப்பவர்களாகிய உங்களை புகையிலை நிறுவத்தினர் ஏமாற்றுவது போல், நீங்கள் அதிக அங்கத்தினர்களைப் பெறுகின்றீர்கள், அவ்வளவு தான்,' ஓ, இதைக் கூறி இன்னும் சில நிமிடங்களில் முடிக்கிறேன். 142. குருட்டு லவோதிக்கேயாவே, நாம் எவ்வளவு குருவாக ஆக முடியும். குருட்டு லவோதிக்கேயாவே, இக்காலத்து குருடர்களை பாசாங்கு கொண்டு தவறான கோட்பாடுகளினாலும் தவறான கொள்கைகளினாலும், தவறான ஸ்தாபனங்களினாலும், தவறான கோட்பாட்டு புத்தகங்களினாலும் நீ வழி நடத்தி வருகிறாய். ஓ, குருட்டு லவோதிக்கேயாவே, குருடர்களை வழி நடத்துகிறாயே, நீங்கள் அனைவரும் குழியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறீர்கள், 143. போதகரே, இன்றிரவு உங்கள் வடிகட்டும் பொருளை மாற்றுங்கள். உங்கள் முறைமைக்குள் ஸ்தாபன நிக்கோட்டினாகிய கொள்கைகளையும் கோட்பாடு-களையும் இழுத்துக் கொள்ளாதீர்கள். "இதனோடு ஒரு வார்த்தை கூட்டினால் அல்லது இதிலிருந்து ஒரு வார்த்தை எடுத்துப் போட்டால்...." என்று இயேசு கூறியுள்ளார், ஸ்திரீகள் அப்படி செய்வது சரியென்றும், இதை, அதை, மற்றதை செய்வது சரியென்றும் நீங்கள் சபையோரிடம் கூறுகின்றீர்கள். நீங்கள் கூறுவதற்கு அவர்கள் உண்மைமாய் நடந்து, அவைகளைச் செய்து, இந்த கோட்பாடுகளையும் மற்றவைகளையும் அவர்கள் கைக்கொள்ளும்போது, உங்களுக்கு வெட்கமில்லையா-? 144. இயேசு “குருடரான பரிசேயரே'' என்று கதறினது போல், என் இருதயத்திலுள்ள பரிசுத்த ஆவியும் இன்றிரவு "குருட்டு லவோதிக்கேயாவே, எத்தனை தரமோ உனக்கு எழுப்புதலைக் கொடுக்க மனதாய் இருந்தேன். இப்பொழுது உன் வேளை வந்து விட்டது. இப்பொழுது காலதாமதமாகி விட்டது. தேவன் உன்னிடத்தில் அனுப்பீனவர்களை நீ எவ்வளவாக பரியாசம் செய்தாய்-! ஆனால் இப்பொழுதோ உன் வேளை வந்து விட்டது, ஓ, அமெரிக்க ஐக்கிய நாடே, அமெரிக்க ஐக்கிய நாடே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக தேவன் எத்தனை தரமோ உன்னைக் கூட்டிச் சேர்த்து கொள்ள மனதாயிருந்தார். ஆனால் உனக்கோ மனதில்லாமற் போயிற்று,' என்று கதறுகிறது. இப்பொழுது இந்த சத்தமானது ஒரு கரையிலிருந்து மறுகரைக்கும், வடக்கிலிருந்து தெற்குக்கும், கிழக்கிலிருந்து மேற்குக்கும் சென்று கொண்டு இருக்கிறது. எவ்வளவாக தேவன் உன்னைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தார்! ஆனால் உனக்கோ மனதில்லாமற் போயிற்று. இப்பொழுதோ உன் வேளை வந்து விட்டது. 145. நாடுகள் உடைகின்றன, உலகம் பிளக்கின்றது. ஆயிரத்து ஐந்நூறு மைல் நீளமும் நானூறு மைல் அகலமுமுள்ள அதன் துண்டு ஒன்று, இந்நாட்களில் ஒன்றில், அந்த பெரிய பிளவுக்குள் நூறு அல்லது நாற்பது மைல் ஆழத்தில் சரிந்து விழுந்து விடும். அப்பொழுது அலைகள் உயர எழும்பி கென்டக்கி நாடு வரை அடிக்கும். அப்படி நடக்கும்போது, அது உலகத்தையே மிகவும் கடினமாக அசைக்கும். அப்பொழுது உயரே உள்ள அனைத்தும் குலுங்கி கீழே விழும். 146. ஓ, காலங்கள் தோறும் உள்ள கன்மலையில் என்னை மறைத்துக் கொள்ளும். தேவனே, தான், நாள்....கர்த்தாவே, என் மேல் உமது ஆவியை ஊதும், ஜீவனுள்ள தேவனின் ஆவியே,, என் மேல் இறங்கும். கர்த்தாவே, நான் தேவனுடைய வடிகட்டும் பொருளை எடுத்துக் கொண்டு அதன் கீழ் வாழட்டும். ஓ, கர்த்தாவே, நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்யாத படிக்கு, புத்துணர்ச்சி அளிக்கும் பரிசுத்த ஆவியின் காற்றை என் நுரையீரல்களிலும், என் ஆத்துமாவிலும் நாள் தோறும் நான் பெற்றுக் கொள்ளட்டும். பரிசுத்த ஆவியே, என் மேல் ஊதும், என் மேல் ஊதும். நான்.... 147. தேவனுடைய வார்த்தையை என் இருதயத்தில் நோக்கத்துடன் நான் பதித்துக் கொண்டு அதிலிருந்து நான் வலது புறம் இடது புறம் திரும்பாமலிருக்கவும், என் வாழ்நாள் முழுவதும் அதற்கு உண்மையாக ஜீவிக்கவும் அருள்புரியும், ஓ பிதாவாகிய தேவனே, அந்த வார்த்தைகளை எனக்கு உயிர்ப்பித்து தந்து, எனக்கு முன்னிலையில் அது நிறைவேறக் காத்திருப்பவர்களுக்கு நான் இயேசுகிறிஸ்துவை வெளிப்படுத்தும்படி செய்யும். அதுவே என் ஜெபமாயுள்ளது. 148. ஓ, என்னே-! அவர்கள் இன்று அந்த சபைகளில் என்ன செய்கின்றனர் என்று கவனியுங்கள், அந்த ஸ்தாபன வடிகட்டும் பொருள்களின் வழியாக ஜனங்களை உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திற்குள் உறிஞ்சி விடுகின்றனர். ஏன்-? ஏன்-? அது அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சையை அருளுகின்றது, ஸ்தாபனங்கள். அவர்களுக்கு ஸ்தாபனத்தைக் குறித்த ருசியுள்ளது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்.'' 149. ஓவ்வொரு முறையும் தேவன் அவர்களுக்கு எழுப்புதலை அனுப்பின போது... அவர்கள் என்ன செய்தனர்-? அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அது சரியா-? அவர்கள் அவர்களுடைய ரகம் வடிகட்டும் பொருளைப் பெற்றுள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு ஒரு பெரிய ருசியுள்ளது. இப்பொழுது தேவன் அவர்களுக்கு அவர்களுடைய ருசியின் வாஞ்சையைத் தரப்போகின்றார். அவர் அவர்களுக்குத் தரப்போகின்றார். அவர்கள், அவர்களை உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திற்குள் உறிஞ்சி விடுகின்றனர். அப்பொழுது அவர்கள் ஸ்தாபன ருசியைப் பெற்றுக் கொள்கின்றனர். அது அவர்களிடம் வந்தது. 150. ஓ, லவோதிக்கேயா சபையே, இந்த காலத்தில் அவர்களுடைய வஞ்ச கத்தினால் ஏமாந்து போகாதே, ஓ பெந்தெகொஸ்தே, நீ லவோதிக்கேயா- வுக்குள் சென்று விட்டாய், நீ லவோதிக்கேயாவின் ஒரு பாகமாக ஆகி விட்டாய். சபையானது மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் வழியாக மரித்து விட்டது. அது வெறும் சடங்காச்சாரமே.... ஆனால் பெந்தெகொஸ்தேயினராகிய நீங்கள் இன்னமும் எப்பொழுதாவது ஒரு முறை "ஆமென்" என்று சொல்லுகின்றீர்கள். நீங்கள் மேடையில் அதிக இசையை இசைத்து, தலைமயிர் கத்தரித்துக் கொண்ட பெண்களை நடனமாடும்படி செய்து, அதே சமயத்தில் இன்னமும் தெய்வீக சுகமளித்- தலில் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள். எத்தனை தரமோ தேவன் உங்களை தெரிந்து கொண்டிருப்பார், ஆனால் நீங்களோ வேறொரு வடிகட்டும் பொருளை, ஸ்தாபன வடிகட்டும் பொருளைத் தெரிந்து கொண்டீர்கள். எத்தனை தரமோ தேவன் உங்களைத் தெரிந்து கொண்டு இருப்பார், 151. அது எவ்வளவு வஞ்சகமாய் உள்ளது-! மத்தேயு 24:24, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும் என்று இயேசு கூறினார். நீங்கள் எவ்வளவு அருகாமையில் இருக்கின்றீர்கள். ஏவாள் எப்படி ஏற்றுக் கொள்ளாமல் ஒன்று அல்லது இரண்டு சிறிய காரியங்களை விட்டு விட்டாளோ, அது போன்று நீங்களும் இருக்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டீர்கள், உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு தான் அதற்கு அவசியம். நீங்கள் முழுவதையும் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஏனெனில் ஒன்றிலே தவறினவன் எல்லாவற்றிலேயும் குற்றவாளிவாயிருப்பான், ஓ-! 152. பெந்தெகொஸ்தே, பெந்தெகொஸ்தே, உன் சிந்தனையை தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக செலுத்து, உன் ஸ்தாபனக் கனவுகளின் வழியாக அல்ல. அப்பொழுது நீ பரிசுத்த மனிதனின் ருசியோடு, உண்மையான பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு, வெளி வருவாய். 153. மனைவி தலைமயிர் கத்தரிக்கவும், குட்டை கால் சட்டை அணியவும் அல்லது 'ஸ்லாக்குகள்' (Slacks) அணியவும் அனுமதிக்கும் ஒரு மனிதன். சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளின் வழியாகத் தான் கடந்து வந்திருக்கிறான் என்று கூறுவதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா-? 'ஒரு மனிதன் அப்படிப்பட்ட காரியத்தை செய்வான் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? 154, சபையோர் நல்ல ஊதியம் தருவதனால் ஒரு போதகர் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு, அவர்கள் அவரை முதுகில் தட்டிக் கொடுத்து, "டாக்டர், சகோதரனே, சங்கை போதகரே'' என்று அழைத்து, அவரை எல்லா விதமான விருந்துகளுக்கும், கடற்கரையில் கலப்பு குளியலுக்கும் அழைத்து சென்று, அப்படிப்பட்ட ஒருவர், தான் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளின் வழியாக கடந்து வந்துள்ளார் என்று உரிமை கோருவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 155. மேடையின் மேலுள்ள ஸ்திரீகளில் சிலர் முழங்காலுக்கு மேல் ஆடைகளை அணிந்து, அவை மிகவும் இறுக்கமாக தைக்கப்பட்டு, அவர்களுடைய பெண் உருவத்தையும், அவர்கள் செய்யும் ஒவ்வொரு அசைவையும் வெளிப்படையாகக்காண்பித்து, அவர்களுடைய ஆடைகளின் வழியாக, அவர்களுடைய உள்ளாடைகள் காணப்பட்டு, குட்டை கால் சட்டை, இரு துண்டு நீச்சல் உடை அணிவது போன்று அவ்வளவு மோசமாக உள்ளது-! குருடரான, பெந்தெகொஸ்தே, லவோதிக்கேயா போதகர்களே, இன்னும் எவ்வளவு காலம் தேவன் உங்களுடன் பொறுமையாயிருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை; பார்வைமற்ற உங்கள் கண்களின் மீது தேவன் இரக்கமாயிருப்பாராக-! உங்கள் கண்கள் திறக்கப்பட்டு நீங்கள் காணத்தக்கதாக, அவர் இன்றிரவு கலிக்கத்தை வைத்திருக்கிறார். 156. இன்று காலை நான் கூறினது போன்று, நாம் காணும் காலத்தில் இருக்கிறோம் - மேல் பாகம். அதற்கு மேல் சென்று நீங்கள் அறிந்து கொள்ள வேறெந்த உறுப்பும் கிடையாது. நீங்கள், உங்கள் மூக்கினால் முகரலாம், உங்கள் உதடுகளினால் நீங்கள் பேசலாம், உங்கள் கைகளினால் நீங்கள் உணர்ந்து, அதை நீட்டி ஏதாவதொன்றை எடுக்கலாம், உங்கள் கால்களை உபயோகித்து நடக்கலாம், ஆனால் உங்கள் கண்களுக்கு மேலே நீங்கள் செல்ல முடியாது . 157. மல்கியா 4-வந்து விட்டது-! அது உண்மை. சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும். ஓ. அந்த ஒளியில் நடவுங்கள்-! நாம் அந்த ஒளியில் அழகான ஒளியில் நடப்போம் இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது என்னைச் சுற்றிலும் இரவும் பகலும் அது பிரகாசிக்கட்டும் (வார்த்தையாகிய) இயேசுவே உலகத்தின் ஒளி (ஆம். ஐயா!) 158. ஓ. சகோதரனே, அதன் வழியாக கடந்து வா. அப்பொழுது நீ பரிசுத்த ஆவியோடும் பரிசுத்த மனிதனின் ருசியோடும் வெளி வருவாய். 159. ஓ, ஸ்திரீயே, உன் உடைகள் போன்ற உன் நவீன கருத்தை அதன் வழியாக செலுத்து, உன் நவீன கருத்தை அதன் வழியாக செலுத்து. மனிதருக்கு முன்னால், 'நீ தெருவில் போவதற்கு முன், வாலிபப் பெண்களே, வயோதிப ஸ்திரீகளே, உங்கள் பின்பாகமும் முன்பாகமும் வெளியே தள்ளிக் கொண்டு வருவது போல் அவ்வளவு இறுக்கமான ஆடைகளை அணிந்து தெருவில் போவதற்கு முன்பு, நான் குறை கூறவில்லை; நான் உங்கள் சகோதரன். நான் ஜீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும் நடுவில் நின்று கொண்டு, நான் என்ன கூறுகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். நீங்கள் வெளியில் செல்வதற்கு முன்பு - உங்கள் சரீரம்: தேவன் உங்களுக்கு அளித்து உள்ள புனிதமான ஒன்று என்பதை உணருங்கள் அவ்வாறு உடை உடுத்தி நீங்கள் தெருவில் செல்வதற்கு முன், உங்கள் சிந்தையை சிந்திக்கும் ஸ்திரீயின் வடிகட்டும் பொருளின் வழியாக செலுத்துங்கள். உங்களை இச்சையோடு எவனாகிலும் பார்த்தால், நீங்கள் அவனுடன் ஏற்கனவே விபச்சாரம் செய்தாயிற்று என்பதை நினைவில் கொள்ளுங்கள். சகோதரியே, அதை நினைவில் கொள்வாயாக-! 160. சகோதரனே, உன் தலையைத் திருப்பி அவளை இரண்டாம் முறை ஓரக் கண்ணால் காண்பதற்கு முன்பாக, உன் சிந்தையை சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளின் வழியாக செலுத்து. அப்பொழுது நீ பரிசுத்த மனிதனின் ஆசியுடன் வெளிவந்து (பார்-?) எது சரியோ அதை மாத்திரம் செய்வாய். 161. கவனி, உன் சிந்தையை சிந்திக்கும் ஸ்திரீயின் வடிகட்டும் பொருளின் வழியாக செலுத்தினால், நீ பரிசுத்த ஸ்திரீயின் உடைகளுடன் வெளி வருவாய். அது உண்மை-! சகோதரனே, நீ பரிசுத்த மனிதனின் பார்வையுடன் வெளி வருவாய். அது ஒரு காரியம் மாத்திரமே. நீ செய்யும் ஒவ்வொன்றையும் தேவனுடைய வார்த்தை என்னும் வடிகட்டும் பொருளின் வழியாக செலுத்தி. அது சரியா தவறாவென்று பார். 162. நீ பரிசுத்த ஸ்திரீயின் ஆடைகளுடனும், நீண்ட தலைமயிருடனும், நாணயமாக உடுத்தியும், சாந்தமும் தாழ்மையுள்ள ஆவியுடனும் வெளி வருவாய். வரிந்து கட்டிக்கொண்டு மற்றவர்களிடம் சண்டை போடும் ஆவி அல்ல, சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி. அதுவே தேவனுடைய பார்வை-யில் விலையேறப்பெற்ற பொக்கிஷம் (1.பேது.3:4). வேதம் அவ்வாறு கூறுகின்றது. தேசத்தின் மற்ற பாகங்களில் உள்ளவர்களிடம் ஒன்றை நான் கேட்க விரும்புகிறேன். இன்னும் சில நிமிடங்களில் நாம் முடிக்கப் போகின்றோம். 163. இன்றிரவு நாம் அனைவருமே நமது விருப்பங்களை ஆராய்ந்து பார்த்து, எத்தகைய வடிகட்டும் பொருளின் வழியாக நாம் எதை பெற்று வந்து இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - நாம் ஒவ்வொருவரும், இங்குள்ளோரும், தேசத்தின் மற்ற பாகங்களில் உள்ளவர்களும் நம்மை ஆராய்ந்து பார்ப்போமாக-! உங்கள் விருப்பங்களை ஆராய்ந்து பாருங்கள். வாழ்க்கையில் உங்களுக்கு உண்மையில் என்ன வேண்டுமென்று. நீங்கள் எதற்காக போராடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று ஆராய்ந்து. பாருங்கள். எதற்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் சபைக்கு எதற்காக செல்கின்றீர்கள் என்று ஆராய்ந்து பாருங்கள். எது உங்களை... சபைக்குச் செல்வது நல்லது. ஆனால் சபைக்கு செல்வதுடன் நின்று விட வேண்டாம். அது உங்களை இரட்சிக்காது. பாருங்கள்-? சில நிமிடங்கள் ஆராய்ந்து பாருங்கள். ''என் குறிக்கோள்... எத்தகைய வடிகட்டும் பொருளின் வழியாக நான் பெறுகிறேன்-?'' என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப் போகாமல் இருந்தால், உங்கள் ஆத்துமா அவ்வாறு செய்யாமற்போனால், உங்களில் ஏதோதவறுண்டு. ஏனெனில் உங்கள் ருசி என்னவென்றும், உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாயுள்ளது என்றும், அது வெளிப்படையாகக் காண்பிக்கிறது. அது பரிசுத்தமும், நிதானமும், கௌரவமுமுள்ள வாழ்க்கையாயிருக்குமானால், அது அவ்வாறே வெளிவரும். அது அப்படி இல்லாமற்போனால், உங்களுக்குள் இருக்கும் வேறொரு ருசி வேறொன்றை இழுத்துக் கொண்டிருக்கிறது. அது முற்றிலும் உண்மை! ஆனால் உங்கள் ருசி தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய சித்தத்துக்கும் இருக்குமானால், உங்களுக்குள் என்ன உள்ளது என்றும், அந்த ருசியை எது அளிக்கிறதென்றும் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் அந்த வார்ததையின் ஒரு பாகம் என்பதை அது காண்பிக்கிறது. அந்த வார்த்தை உங்களுக்குள் இருந்து கொண்டு. வார்த்தையிலிருந்து இழுத்துக் கொண்டிருக்கிறது. 164. அதை இழுப்பது எது-? அது வார்த்தையின் வழியாக இழுக்கின்றது. ஏனெனில் இக்காலத்தின் கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு பாகமாக நீங்கள் இருக்கின்றீர்கள். அந்த வார்த்தை உங்களுக்குள் இருக்குமானால், அது வார்த்தையின் வழியாக பரிசுத்தாவியை மாத்திரமே இழுத்துக் கொள்ள முடியும். அந்த பரிசுத்தாவி உங்களுக்குள் இருக்கும் வார்த்தையை உயிர்ப்பிக்கின்றது, வார்த்தை மாத்திரமே ஜீவிக்க முடியாது. அது தான் காரணம். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். நான் உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன்,'' பாருங்கள், பாருங்கள்-? பிதாவானவர்.... 165. உலகத்திலுள்ள கிறிஸ்துவின் சரீரத்தின் பாகம் முன் குறிக்கப்பட்டு, இருதயத்தில் வைக்கப்பட்டு... இன்று மறுபடியும் பிறந்து, உண்மை கிறிஸ்தவனாயுள்ள எவனுமே; அவன் சிறுவனாக. அல்லது சிறுமியாயிருந்த முதற்கொண்டு, உனக்குள்ளிருந்த ஏதோ ஒன்று தேவனுக்காக பசி கொண்டு இருந்தது. நீ சபைகளைச் சேர்ந்து கொள்ள முயன்றாய், எல்லாவற்றையுமே செய்ய முனைந்தாய், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அது என்ன-? அது வார்த்தை. நீங்கள் ஒரு வடிகட்டும் பொருளுக்காக தேடிக் கொண்டிருந்தீர்கள். ஒரு நாள் அது உங்களுக்கு முன்பாக பிரகாசித்தது. நீங்கள் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக் கண்டீர்கள். அது உங்கள் ருசிக்கு திருப்தியளித்தது. பாருங்கள்-? ஏனெனில் உங்களுக்குளிருந்த ஜீவன் இழுத்துக் கொண்டிருந்தது. அது உங்கள் இருதயத்திலுள்ள விருப்பத்தைப் பொறுத்தது. நீங்கள் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இது, அது மற்றதன் வழியாக இழுக்க முடியாது. நீங்கள் சரியான வடிகட்டும் பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் ஒரு சிந்திக்கும் நபர், பாருங்கள்? 166. நீங்கள் சிந்திக்கும் நபராயிருப்பீர்களானால், நீங்கள் முன்குறிக்கப்பட்டு, உலகத் தோற்றத்துக்கு முன்பே வடிகட்டப்பட்டிருக்கிறீர்கள். 167. ஒரு ஸ்தாபனப் போதகர் இதை கேட்க நேர்ந்தால், அவர் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளைத் தெரிந்து கொள்வாரென நம்புகிறேன். அவர் ஸ்தாபனப்போதகராக இருப்பாரானால், அப்பொழுது நிச்சயமாக அழிந்து போகக்கூடிய அந்த ஸ்தாபன பெட்டியை அவர் கீழே போட்டு விட்டு, ஏன் எனில் அது மனிதனுடைய வார்த்தையாயுள்ளது. என்றென்றும் தவறக் கூடாததும் 'ஒழிந்து போகக் கூடாததுமான வடிகட்டப்பட்ட தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வார். அது பரிசுத்த மனிதனின் ருசிக்கு ஏற்ப அமைந்திருக்கும். யாக்கோபைப் போல் நீங்களும் உலகத்தையும், ஒவ்வொரு ஸ்தாபனத்தின் பேரில் நீங்கள் கொண்டுள்ள பசியையும், நீங்கள் உலகத்தில் பேராயராகவோ, கார்டினலாகவோ, தேசத்து போதகராகவோ, அல்லது, ஒரு பெரிய சபைக்குப் போதகராகவோ இருப்பது போன்ற, உலகம் உங்களுக்குத் தரக்கூடிய, புகழைத் தியாகம் செய்து விடுவீர்கள், ஏசாவைப் போல் நீங்கள் உலகத்தின் ஒரு பாகமாக ஆகி விடமாட்டீர்கள். ஆனால் யாக்கோபைப் போல் நீங்கள் சேஷ்ட புத்திர பாகத்தைப் பெற்றுக் கொள்ள உங்களிடமுள்ள எல்லாவற்றையும் கொடுத்து விடுவீர்கள். அதுவே சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள். அது உங்களுக்கு பரிசுத்த மனிதனின் ருசியையளிக்கும். அது திருப்தியையளித்து தேவனுடைய பரிசுத்த நன்மையின் நித்திய ருசி உடன் இணைந்து விடும். 168. ஏவாளின் சிந்தை அல்லது யோசனையின் வழியாக சாத்தான் முதல் துளையையிட்டு அதன் வழியாக அவனுடைய ஞானத்தின் ருசியையும் அறிவின் ருசியையும் உள்ளே நுழைத்தான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 169, இதை யோசித்து பாருங்கள். நான் முடிக்கப் போகின்றேன். சாத்தான் முதலாம் துளையையிட்டான். அவள் பெற்றுக் கொண்டிருந்தது எல்லாம் வார்த்தையே. தேவனுடைய வார்த்தையின் வழியாக அவள் பரிசுத்தாவியை தன்னிடம் இழுத்துக் கொண்டிருந்தாள். அவள், "நீ இந்த வடிகட்டும் பொருளின் வழியாக சுவாசிக்கும் வரைக்கும் சாகமாட்டாய், ஆனால் அதற்கு வெளியே நீ காற்றை உட்கொண்டால். சாகவே சாவாய் என்று தேவன் கூறினார்," என்று சொன்னாள். பாருங்கள்-? 170. ஆனால் சாத்தான், "உனக்கு ஒன்றுமே தெரியாது. இதை சற்று ருசித்து பார், அப்பொழுது உனக்குத் தெரியும், நீ தேவனைப் போல் ஆகிவிடுவாய். அவருக்கு நன்மை தீமை என்னதென்று தெரியும், உனக்கோ தெரியாது. நீ மாத்திரம் இதை சிறிது ருசித்து பார்த்தால்..'' என்றான். அவன், ஒரு துளையிட அவள் அனுமதித்தாள் - ஒரு சிறு துளை மாத்திரம். 171. நான் ஏன் கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா-? நீங்கள், "வரங்களைப் பெற்றுக் கொள்ளுதல் எப்படியென்று நீங்கள் ஏன் பெண்களுக்கு கற்பித்துத் தரக்கூடாது?' என்று கேட்கிறீர்கள். 172. "அவர்கள் அ ஆ இ என்னும் மொழியின் முதலெழுத்துக்களையே அறியாதிருக்கும் போது, அவர்களுக்கு எப்படி 'அல்ஜீப்ரா' கணிதம் கற்றுத்தர முடியும்-?'' என்று கேட்கிறேன். ஒரு சிறு துளை மாத்திரமே அதற்கு அவசியமாய் இருந்தது. அவன் உலகத்தின் ஞானத்தை அதன் வழியாக செலுத்தினான். அப்படி செய்த போது, ஞானத்தின் ருசியைப் பெற ஆவல் கொண்ட அந்த முழு குடும்பத்துக்கும் அது மரணத்தை விளைவித்தது. 173. இப்பொழுது அந்த வடிகட்டும் பொருளைப் பாருங்கள். அது அவளுடைய ருசி என்னவென்பதை தெளிவுபடுத்தினது. அவளுடைய ருசி உலகத்தைச் சார்ந்திருந்தது; அதை தான் அவள் பெற்றாள். இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. அவர்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்து, தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டு அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருக்கின்றனர். பாருங்கள்-? அவர்கள் அந்நிய பாஷைகள் பேசவும், கூச்சலிடவும் சாத்தான் அனுமதிப்பான். அவர்கள் தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்தவும் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யவும் அவன் அனுமதிப்பான். 174. இயேசு, "அந்நாளில் அநேகர் என்னிடத்தில் வந்து: கர்த்தாவே, நான் பிசாசுகளைத் துரத்தினேன் அல்லவா, அநேக காரியங்களைச் செய்தேன் அல்லவா-? என்பார்கள். நானோ: அக்கிரமச் செய்கைக்காரரே, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை என்பேன்" என்றார் (மத்.7:22-23). தேவனுடைய வார்த்தை உங்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட போது, நீங்கள் அப்பொழுதும் உலகத்தின் வடிகட்டும் பொருளிலிருந்து உறிஞ்சுக் கொண்டு இருந்தீர்கள் (பாருங்கள்-?). உங்கள் இருதயத்திலுள்ள ருசி என்னவென்பதை அது காண்பிக்கிறது. 175. புறாக்கள் செத்து அழுகிப்போன மாமிசத்தை தின்ன முடியாது. அவைகள் அதை தின்ன முடியாது. அவைகளுக்குப் பித்த நீர் கிடையாது. ஆனால் காகம் புறாவைப் போல் தானியமும் அதே சமயத்தில் காகத்தைப் போல் செத்து அழுகின மாமிசத்தையும் தின்ன முடியும் (பாருங்கள்-?), ஏனெனில் அது மாய்மாலமுள்ளது. ஆனால் புறாவோ மற்ற பறவைகளைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆகையால் தான் தேவன் வானத்தில் இருந்கு இறங்கி வரும் புறாவைப்போல் தம்மைக் காண்பித்தார். பாருங்கள்-? புறாவால் செத்து அழுகின மாமிசத்தின் துர்நாற்த்தை சகிக்க முடியாது. அது ஒரு பருந்து அல்ல. அதற்கு காரணம், அதற்கு பித்த நீர் கிடையாது. அதனால் அதை ஜீரணிக்க முடியாது. அது செத்து அழுகின மாமிசத்தை தின்ன நேர்ந்தால், அது அதைக் கொன்று போடும். புறாவுக்கு குளிக்க வேண்டிய அவசியமில்லை. புறாவின் உடலுக்குள்ளிருந்து வெளியே வரும் எண்ணெய் பசை அதை சுத்தமாக வைத்துக்கொள்கிறது. புறாவுக்குள்ளிருக்கும் ஜீவன் அந்த எண்ணெயை உற்பத்தி செய்து. அதன் சிறகுகளை தூய்மையாக வைத்துக் கொள்கிறது. கிறிஸ்தவனும் அவ்வாறே இருக்கிறான். அவர்களுக்குள் இருக்கும் ஜீவன் அவர்களை தூய்மையாக வைத்துக் கொள்கிறது. அது வடிகட்டப்பட்டுள்ளது. 176. ஓ, கவனியுங்கள்! அந்த வடிகட்டும் பொருளைக் கவனியுங்கள். இன்று அவர்கள் புரிந்து கொண்டிருக்கும் செயல்களின் ருசியை உடையவர்களாய் இருக்கின்றனர் என்று நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்வீர்கள்.. 177, இந்த நவீன சபையை பாருங்கள். அவர்களுடைய வடிகட்டும் பொருளைக் கவனியுங்கள். அவர்கள் எதில் பிரியப்படுகின்றனர் என்பதை நீங்கள் காணலாம். அவர்களிடம் என்ன உள்ளது என்பதைப் பாருங்கள். அவர்கள் எதில் பிரியப்படுகின்றனர்-? குமாரி லவோதிக்கேயா தேவனுடைய நியாயத் தீர்ப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள். அது உண்மை. அன்பு, சபையின் அன்பு, இன்று மகத்தான ஸ்தாபனமாகிய லவோதிக்கேயாவின் பேரிலுள்ளது. ஒரு பெரிய அமைப்பு, புகழ்வாய்ந்த ஒன்று. நன்றாக உடுத்த மக்கள், உயர்ந்த நாகரீகமுள்ளவர்கள். அறிவில் நிறைந்தவர்கள், பிசாசினால் நிறைந்து, தாங்கள் கிறிஸ்துவின் சபை என்னும் வஞ்சகத்தினால் பீடிக்கப்பட்டவர்கள். அவர்களை விவரிக்க ஒரே ஒரு வார்த்தை மாத்திரமே உண்டு. அது தான் 'அந்திக் கிறிஸ்து'. ஏனெனில் கிறிஸ்து போதித்த ஏறக்குறைய எல்லாவற்றி-ற்கும் அவர்கள் விரோதமாயுள்ளனர். உண்மை-! அவர்களை 'அந்திக்கிறிஸ்து' என்று அழைத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு அவர்கள் விரோதமாயுள்ளனர். 178. இப்பொழுது, நீங்கள் இன்றிரவு சிந்திக்கும் மக்களாக இருப்பீர்களானால்; இங்குள்ளவர்களும், இச்செய்தி சென்று கொண்டிருக்கும் தேசத்திலுள்ள மற்றவர்களும் உங்கள் விருப்பம் வேதாகம ருசியாக அமைந்திருக்கும், ஸ்தாபன ருசியாக அல்ல. உங்கள் ஆத்துமாவை எந்த வார்த்தையின் வழியாக வடிகட்டும்படியாக நான் கேட்டுக் கொள்கிறேனோ, அதே வேதாகம-த்தினால் நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். அதில் ஒரு வார்த்தையை நீங்கள் புறக்கணித்து, அந்த ஒரு வார்த்தையின் வழியாக உங்கள் ஆத்துமாவை வடிகட்டாமல் போனாலும், நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள். ஏனெனில் மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான், சுவாசிப்பான். 179. அது முன் குறிக்கப்பட்டவர்களாகிய உங்களுக்குள் கொண்டு வரப்படும், கர்த்தர் உங்கள் மேல் ஊதும் போது, அவருடைய ஆவி அந்த வார்த்தையை உயிர்ப்பித்து தத்ரூபமாக்கும். அப்பொழுது நீங்கள் இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதைக் காண்பீர்கள், ஓ, என்னே-! 180. உலக ஸ்தாபனத்தை, மத சம்பந்தமான 'பாக்கெட்டை' விட்டு விடுங்கள். அது காட்டில் கிடந்த சிகரெட் பாக்கெட்டைப் போல் கிடக்கட்டும். அது மக்கி, அழுகிப் போகட்டும் (அது தவறான வடிகட்டும் பொருள்). நீங்கள் கிறிஸ்துவாகிய வார்த்தையை ஏற்றுக்கொள்ளுங்கள். அதை ஏற்றுக் கொள்ளுகிற யாவரிடமும் அவர் வந்து, அவர்களுக்கு நித்திய ஜீவனின் ருசியை அருளி, அதைப் பாதுகாக்கிறார். 181. நீங்கள் முன் குறிக்கப்பட்டிருந்தால், வார்த்தையைக் காண்பீர்கள். அதை உங்கள் இடமிருந்து மறைக்க எந்த வழியுமில்லை. அதை நீங்கள் கண்டு, "எனக்கு முன்பாக அது மிகவும் வெளிப்படையாய் உள்ளது. அதை என்னால் காண முடிகிறது. அது இங்குள்ளது. அதை நான் நேரடியாகக் காண்கிறேன், அதை நான் காண்கிறேன், அது இங்கு உள்ளது. ஒவ்வொரு வார்த்தையும் வார்த்தைக்கு வார்த்தை - உயிர் பெறுகிறது'' என்பீர்கள். அதுவே நீங்கள் விரும்பும் நித்திய ஜீவனின் ருசி. அதன் வழியாக நீங்கள் சுவாசிக்கும் போது... தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக என்ன வரமுடியும்-? ஆவியைத் தவிர வேறொன்றும் வரமுடியாது - உலகமோ. அவிசுவாசமோ வரமுடியாது. அது தேவனுடைய வடிகட்டும் பொருள், அதன் வழியாக நீங்கள் சுவாசிக்கும் போது, பரிசுத்த ஆவியைத் தவிர வேறொன்றும் அதன் வழியாக வரமுடியாது. 182. அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளத்தை பெறுகின்றீர்கள். பாருங்கள்-? பரிசுத்த மனிதனின் அல்லது பரிசுத்த ஸ்திரீயின் ருசி. அவர்கள் பிழைத்திருக்க விரும்புகின்றனர். அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளனர். இந்த வார்த்தை அவர்களுக்கு உயிர்ப்பித்து தரப்பட்டு உள்ளதால், அவர்கள் பிழைத்திருக்கின்றனர். சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளும் பரிசுத்த மனிதனின் ருசியும். 183. சிகரெட்டு நிறுவனத்தினர் ஏமாற்றுவது போல், நீங்கள் உலகத்தை ஏற்றுக் கொண்டு ஏமாந்து போக வேண்டாம். நீங்கள் உண்மையான 'சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் சுவாசிக்கும் காற்றை, உண்ணும் உணவை அதன் வழியாக வடிகட்டுங்கள். நீங்கள் என்ன-வெல்லாமாக இருக்கின்றீர்களோ, அவையனைத்தையும் தேவனுடைய வார்த்தையின் மூலம் சுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த மனிதனின் ருசியைப் பெறுவீர்கள். அது அந்த ருசியைத் தரும். ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 184. எனக்குத் தெரியும், நாம் இருந்தாலும் இல்லாமற் போனாலும் நாம் இருக்கிறோம் என்று நம்புகிறேன்... நாம் இல்லாமற் போனால், உலகில் வேறு யாராகிலும் இன்று கிறிஸ்துவின் சரீரத்தின் பாகமாய் இருப்பார்கள். அது தேவனுடைய வார்த்தையினால் மாத்திரமே பிழைக்கும் - நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்திற்காக தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும். 185. எனக்குப் புரியவில்லை, எப்படி ஸ்தாபனம் - என்ன காரியங்கள் நிகழும் என்றும் என்ன நடக்குமென்றும் வேதாகமத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவை நிறைவேறுகின்ற நாட்களில், நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் இதுவல்லாமல் அது வேறென்னவாயிருக்குமென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 186. சபையே, என்றாவது ஒரு நாள் உங்களுடன் கூட நான் நியாயத் தீர்ப்பில் நிற்க வேண்டுமென்று உணருகிறேன். புகழுக்காக உங்களிடம் ஏதாவது ஓன்றை நான் தவறாகக் கூறுவது எனக்குத் தூரமாயிருப்பதாக. எனக்கு அது வேண்டாம். என் விருப்பப்படி, மனிதப்பிரகாரமான என் விருப்புப்படி நான் நடக்க வேண்டுமென்றால், நான் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டுக்குச் சென்று, அங்கு எனக்காக ஒரு சிறு அறையை (cabin) கட்டிக் கொண்டு, என் வாழ்நாள் முழுவதும் வேட்டையாடிக் கொண்டிருப்பேன். எனக்கு வயது ஆகின்றது. களைப்பு உண்டாகின்றது. பலம்குன்றி வருகின்றது. ஆனால் என்னால் ஊழியத்தை விட்டுச் செல்ல முடியாது. எனக்குள் ஏதோ ஒன்று என்னை சிரமப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. உங்களிடம் நான் சத்தியத்தை- முழு சத்தியத்தையும் எடுத்துரைக்காமல் - போனால் எனக்கு ஐயோ-! என் உடலில் கடைசி மூச்சு ஒடுங்கும் வரைக்கும் நான் இங்கு நிற்காமல் போனால் எனக்கு ஐயோ-! யார் என்ன கூறினாலும், நான் நின்றே ஆக வேண்டும். நான் தேவனுக்கு முன்பாக உத்திரவாதம் உள்ளவனாய் இருக்கிறேன். 187. 'நாங்கள் பிரசங்கிப்பவை சத்தியம் என்று நான் உண்மையில் நம்புகிறேன். அதை நான் பிரசங்கிக்கும் காரணத்தால் அல்ல, இல்லை, என் சகோதரனே. இல்லை, ஐயா-! தேவன் என் இருதயத்தை அறிவார். நான் சபையோருடன் உட்கார்ந்து கொண்டு, அபிஷேகம் பெற்றவர்கள் பிரசங்கிப்பதைக் கேட்க எனக்கு ஆவல். அது எனக்கு எவ்வளவு எளிதாக இருக்கும்-! நிச்சயமாக-! ஏனெனில் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருக்கும் மனிதனைப் போலவே எனக்கும் நித்திய ஜீவன் இருக்கும். அவர் எதனுடைய பாகமாயிருக்கிறாரோ, நானும் அதன் பாகமாயிருப்பேன், நானும் அவர் செல்லும் பரலோகத்துக்கே செல்வேன், அவர் பெற்றுள்ள அதே சலுகைகள் எனக்கும் இருக்கும். இவ்விதம் நான் இடியும் அடியும் பெறாமல் அங்கு உட்கார்ந்து கொண்டு இருப்பது எனக்கு எவ்வளவு எளிதாக இருக்கும்-! அது எவ்வளவு எளிதாக இருக்கும்-! இங்கு நான் முழு இரவும் உறங்காமல், ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் மாத்திரம், உறங்கி, இரவு முழுவதும். எழுந்த பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். இரவு உறங்கி விட்டு அடுத்த நாள் காலை துப்பாக்கியையோ தூண்டிலையோ எடுத்துக் கொண்டு வேட்டைக்கு அல்லது மீன் பிடிக்கச் செல்வது எவ்வளவு எளிதாயிருக்கும்-! ஆனால் சகோதரனே, அது என் மேல் விழுந்த கடமை. என் கடமையை நான் உதறித்தள்ளாமல், உத்தமமும் உண்மையுமாய் நின்று, பரிசுத்த மனிதனின் ருசியை அளிக்கும் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளை உங்களுக்குத் தர தேவன் எனக்குதவி செய்வாராக! 188. சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் தீட்டுக் கழிக்கும் ஜலமாய் உள்ளது. அது பாவத்தினின்று சுத்திகரிக்கிறது. அது தேவனுடைய வார்த்தை. சிந்திக்கும் மனிதன், தான் தேவனுக்கு முன்பாக நிற்க வேண்டுமென்றும், வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் பதில் கூற வேண்டிய-வனாயிருக்கிறான் என்றும் அறிந்திருக்கிறான். அது உங்கள் இருதயத்திலுள்ள ருசிக்கு திருப்தியளிக்கும். அதை பெற்றுக் கொள்ள தேவன் நமக்குதவி செய்வாராக. நாம் தலைவணங்குவோம்: 189. அன்புள்ள தேவனே, மற்றொரு மணி நேரம் அல்லது 2-மணி நேரம் கடந்து விட்டது. கடிகாரம் நகர்ந்து சென்று விட்டது. இந்த செய்தி சரித்திரம் ஆகி புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு விட்டது. இதற்கு நாங்கள் பதில் கூற வேண்டியவர்களாய் இருக்கிறோம், நாங்கள் புரிந்த ஒவ்வொரு செயலும், நாங்கள் பேசின ஒவ்வொரு வார்த்தையும், எங்கள் மனதில் எழுந்த ஒவ்வொரு சிந்தையும் பதிவுத் தட்டில் பதிவாகி உள்ளது. அந்த தட்டு இன்னமும் சுழன்று கொண்டிருக்கிறது. எங்கள் வாழ்நாள் முடியும் வரை அது சுழன்று பதிவு செய்து கொண்டிருக்கும். பிறகு நாங்கள் நியாத்தீர்ப்பு நாளிலே அதற்கு பதில் கூற வேண்டியதாயிருக்கும். 190. ஓ. தேவனே. வானத்தையும் பூமியையும் படைத்த மகத்தான சிருஷ்டி கர்த்தரே. உம்மை நாங்கள் விசுவாசிக்கிறோம். இந்நாளின் ஜனங்களுக்காக ஜெபிக்கிறேன். அவர்களுடன் என்னையும் சேர்த்து எனக்காகவும் ஜெபிக்கி-றேன் கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய வடிகட்டும் பொருளை பிடிக்க வேண்டுமாய் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, தேவ தூஷணமாக நான் எதை ஆகிலும் கூறினால், என் இருதயத்தில் எனக்குத்தெரியவில்லை. உம்முடைய வார்த்தையை நான் எடுத்து அவ்விதமாக ஒப்பிடுவது தவறானால், என்னை மன்னிக்க வேண்டுகிறேன். 191. ஆனால் கர்த்தாவே, நீர் என்னுடன் காட்டில் அன்று காலை பேசின அன்று முதல் அதை என் மனதை விட்டு என்னால் விலக்க முடியவில்லை. அது உம்மிடமிருந்து வந்த ஒன்று என்று அதை ஏற்றுக் கொண்டேன், பிதாவாகிய தேவனே, அதை நான் ஏற்கனவே பேசி முடித்து விட்டேன். அதை நான் என்ன அர்த்தத்தில் கூறினேனோ. அதே விதமாக அது இருக்கும்படியாக வேண்டிக் கொள்கிறேன், அதாவது, சிந்திக்கும் மனிதன் ஒருவன். அவனுக்கு சிந்தனா சக்தி என்று ஒன்று இருக்குமானால், அவன் தேவனுடைய சமுகத்தில் நிற்க வேண்டும் என்பதை அறிந்து; கறைபடுத்தும் எதையும், தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள எதையும், தன் ஆத்துமாவில் ஏற்றுக் கொள்ள மாட்டான். 192. பிதாவே, நான் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை இன்றைய ஸ்தாபனங்களுடன் நான் ஒப்பிடவில்லை... என்றாவது ஒரு நாள் என் இருதயத்திலுள்ளவைகளினிமித்தம் என்னை நீர் நியாயந்தீர்ப்பர். நான் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்லவென்றும். நான் உண்மையும் உத்தமமுள்ளவனுமாயிருக்க முயன்று. ஒரு கரையிலிருந்து மறுகரை வரைக்கும் உள்ளவர்களுக்காக உமது இரத்தத்தின் கிரயத்தை என் கைகளில் நான் பிடித்திருக்கிறேன் என்பதை நீர் காண வேண்டுகிறேன். அவர்களில் அநேகர் என் மூலம் கேள்விப்பட்டதை விசுவாசித்திருக்கின்றனர். 193. பரலோகத்தின் தேவனே. அவர்கள் ஒருவராவது இழந்து போகாமலிருக்க வேண்டுகிறேன். அவர்கள் ஒவ்வொரு வரையும் நான் உரிமை கோரி, அவர்களுக்கு முன்பாக பாவத்தை நீக்கும் வடிகட்டும் பொருளை. தீட்டுக் கழிக்கும் ஜலத்தை, வார்த்தை மாமிசமான இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை பிடிக்கிறேன். கர்த்தாவே, அதை அருளும். பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் அதன் வழியாக எங்கள் ஆத்துமாக்களில் ஊற்றுவாராக. நாங்கள் இந்த கண்களின் காலத்தில் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியின் ஜீவிக்கும் பிரதிநிதிகளாக இருந்து. சாயங்கால வெளிச்சத்-தைக் காண அருள் புரியும். இதை உம்மிடம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 194. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா-? நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா-? சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் என்று நான் கூறினதால் தவறு செய்திருந்தால். நான் அதற்கு மேலே ஒன்றும் சொல்ல முடியாது. எனக்கு படிப்பு இல்லை, எனக்குத் தோன்றுவதை நான் கூறவேண்டும். அது கீழே கிடப்பதை நான் கண்ட போது, ''என்ன மாய்மாலம்-!'' என்று எண்ணினேன். அப்பொழுது ஏதோ ஒன்று, "சபையைப்போல்," என்றது.... 195. சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள், ஓ, என்னே-!. அதைக் காட்டிலும் அதில் அதிகம் அடங்கியுள்ளது. முதலாவதாக சிந்திக்கும் மனிதன் எவனும் அதை உபயோகிக்கவே மாட்டான். பாருங்கள்-? நிச்சயமாக அப்படி செய்ய மாட்டான். அது புகை பிடிக்கும் மனிதனின் ருசியைக் கேட்கிறது (அது உண்மை-!). ஏனெனில் அவனுடைய ருசிக்கு திருப்தியளிக்க அது அவனுக்கு அவசியம். ஆனால் உண்மையான சிந்திக்கும் மனிதன் எவனும், அவனுடைய ஆத்துமா நியாயத்தீர்ப்புக்கு செல்ல வேண்டுமென்று அறிந்து, அவனுடைய ருசியை தேவனுடைய வார்த்தையின் வழியாக வடிகட்டுவான். "பிதாவான-வர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். அவன் தேவன் உடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். அது தீட்டுக் கழிக்கும் ஜலமாக, அவனைப் பாவத்திலிருந்து பிரிக்கிறது. அது வார்த்தையின் மூலம் வரும் போது, அதை அவிசுவாசிப்பது பாவம் என்று நாம் காண்கிறோம். எனவே அதை நாம் அப்படியே விசுவாசித்து சென்று கொண்டிருக்கிறோம். அது பாவத்திலிருந்து பிரித்து எடுக்கிறது. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நான் அவரை நேசிக்கிறேன் (நமது கரங்களைஅவரிடம் உயர்த்துவோம்) முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 196. அவர் என்ன சொன்னார்-? நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்-களாய் இருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்." (யோவான்.13:35). இப்பொழுது இந்த பாடலை நாம் மறுபடியும் பாடும் போது, நாம் யாராகிலும் ஒருவருடன் கை குலுக்கி, ''சகோதரனே, உம்மை நான் நேசிக்கிறேன்," என்று கூறுங்கள். நான் அவரை நேசிக்கிறேன் (இதை உங்களிடம் "தெரிவிக்க விரும்புகிறேன்...) முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 197. சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா-? சகோதரனே, சகோதரியே, நாளை நீ தெருவில் சென்று உலகத்துடன் சம்பந்தப்படும் போது, உன்னிடம் சிந்திக்கும் மனிதனின் வடி கட்டும் பொருள் உள்ளதா-? அந்த மனிதன் உன்னை உருளும் பரிசுத்தன் என்று அழைக்கும் போது. நீ சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளை உபயோகிக்கின்றாயா? யாராவது உனக்கு விரோதமாக பொல்லாப்பு கூறும் போது, உன்னிடம் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் உள்ளதா-? பாருங்கள்-? தீமைக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்- களுக்காகவும் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். அப்பொழுது நீங்கள் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளின் வழியாக சுவாசிக்கின்றீர்கள்.' 198. உங்களை சிநேகிக்கிறவர்களை மாத்திரம் நீங்கள் சிநேகித்தால், இப்பொழுது நாம் கர்த்தருக்கு அருமையானவர்களுடன் ஒருவருக்கொருவர் கை குலுக்கினது போல்- அது நல்லது தான். ஆனால் சிநேகிக்கத்தகாதவர்-களையும் உங்களால் சிநேகிக்க முடியுமா-? அது தான் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள். அது உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவின் ஆவி, உங்களைச் சிநேகிக்காதவர்களை சிநேகிக்கிறது. அப்பொழுது தேவனிடமிருந்து உங்களுக்கு மிகுந்த பலன் உண்டாகின்றது. அதை மனிதனின் வடிகட்டும் பொருள் இல்லை... நீங்கள் இரண்டாம் வட்டத்தில் இருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் இருதயத்திலிருந்து நீங்கள் உண்மையாகவே அவரை நேசித்தால், நீங்கள் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளின் வழியாக சுவாசிக்கின்-றீர்கள், அது பரிசுத்த மனிதனின் ருசிக்கு திருப்தி அளிக்கிறது என்ன நடந்த போதிலும், உங்கள் இருதயத்திலிருந்து நீங்கள் எல்லாரையும் மன்னிப்பீர்களா- னால், அவர் அற்புதமானவர் அல்லவா-?' ....... முந்தி என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில்........ நாம் அந்த ஒளியில் மிகவும் அழகான ஒளியில் நடப்போம் இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது நம்மைச் சுற்றிலும் இரவும் பகலும் அது பிரகாசிக்கட்டும் இயேசுவே, உலகத்தின் ஒளி. நாம் அந்த ஒளியில் மிகவும் அழகான ஒளியில் நடப்போம் இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது ஓ., நம்மைச் சுற்றிலும் இரவும் பகலும் அது பிரகாசிக்கட்டும் இயேசுவே, உலகத்தின் ஒளி...... ஒளியின் பரிசுத்தவான்களே, நீங்கள் எல்லோரும், இயேசுவே உலகத்தின் ஒளி என்று அறிவியுங்கள் அப்பொழுது பரலோகத்தின் மணிகள் இயேசுவே உலகத்தின் ஒளியென்று தொனிக்கும் ஓ . நாம் அந்த ஒளியில் மிகவும் அழகான ஒளியில் நடப்போம். இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது ஓ. நம்மைச் சுற்றிலும் இரவும் பகலும் அது பிரகாசிக்கட்டும் இயேசுவே, உலகத்தின் ஒளி ............ உங்களுக்கு அது பிடித்திருக்கிறதா....? ஓ, நாம் அந்த ஒளியில் மிகவும் அழகான ஒளியில் நடப்போம் இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது ஓ, நம்மைச் சுற்றிலும் இரவும் பகலும் அது பிரகாசிக்கட்டும் இயேசுவே, உலகத்தின் ஒளி ......... அது எனக்கு மிகவும் பிரியம் என் விசுவாசம் உம்மையே மேலே நோக்குகிறது கல்வாரியின் ஆட்டுக் குட்டியே ஓ தெய்வீக இரட்சகரே! .. நான் ஜெபிக்கும்போது எனக்கு செவிகொடும் என் பாவத்தையெல்லாம் போக்கும் (கர்த்தாவே, வார்த்தையின் வழியாக என்னை வடிகட்டும்) ஓ இந்நாள் முதல் நான் முற்றிலும் உம்முடையவனாயிருக்கட்டும் அதை சற்று யோசித்து பாருங்கள்! வார்த்தையின் வழியாக வடிகட்டப்பட்டு, முற்றிலும் உம்முடையவனாயிருக்கட்டும். வாழ்க்கையின் இருள் சூழ்ந்த சிக்கலான பாதையில்நான் நடந்து" என்னை துயரங்கள் சூழும் போது என் வழிகாட்டியாயிரும் இருள் பகலாக மாறக் கட்டளையிடும் துயரத்தின் பயங்களைப் போக்கும் உம்மை விட்டு அலைந்து திரிய. என்னை அனுமதியாதேயும். (சகோ.பிரான்ஹாம் மெளனமாக இசைக்கிறார்- ஆசி). சோர்ந்து போகும் என் இருதயத்தை என் வைராக்கியத்தினால் ஊக்குவியும் ஓ இருள் பகலாக மாறக் கட்டளையிடும் துயரத்தின் கண்ணீரைத் துடையும் ஓ இந்நாள் முதல் நான் முற்றிலும் உம்முடையவனாயிருக்கட்டும். 199. அன்புள்ள தேவனே, உமக்கு, பாடல்களைப் பாட எங்களுக்கு விருப்பம். அதன் மூலமாக சபையோர் அனைவரும், நீர் எங்கள் மேல் ஜீவ வார்த்தை- யை ஊதும்போது, எங்கள் உணர்ச்சிகளை உம்மிடம் வெளிப்படுத்த முடிகிறது. கர்த்தாவே, நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். அந்த பாடலின் மூலமாக எங்களை ஏற்றுக்கொள்ளும். கர்த்தாவே, எங்களை ஏற்றுக் கொள்வீரா-? தேவனுடைய வார்த்தையின் வழியாக வடிகட்டப்பட்டு, ஒவ்வொரு நாளும், ஒளியில் - சுவிசேஷ ஒளியில் நடக்க வேண்டுமென்பதே எங்கள் விருப்பமாயுன்ளது. நாங்கள் பரலோகப் புறாவுடன் கூட நடந்து செல்லும் போது ஒவ்வொரு நாளும் எங்கள் வழியை அன்பினால் நிரப்பும் நாங்கள் வழிநெடுக எப்பொழுதும் பாடலோடும் புன்னகையோடும் செல்வோமாக ஒவ்வொரு நாளும் எங்கள் வழியை அன்பினால் நிரப்பும். 200. கர்த்தாவே, அதை அருளுவீராக. எங்களை இப்பொழுது ஒருமித்து ஆசிர்வதியும். உமது கிருபையும் இரக்கமும் எங்களோடே கூட இருப்பதாக. தேசம் பூராவும் உள்ள வியாதியஸ்தரையும் துன்பப்படுகிறவர்களையும் சுகப்படுத்தும். 201. சகோ. காசின்ஸ் சுகமடைந்து ஆஸ்பத்திரியை விட்டு வீடு சென்றதற்காக இன்றிரவு உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நீர் செய்த எல்லாவற்றிற்-காகவும், எங்கள் பெலன் உயர்த்தப்பட்டு உள்ளதாக நாங்கள் இப்பொழுது உணருவதற்காகவும் உமக்கு நன்றி. 202. கர்த்தாவே, இன்றிரவு துண்டித்து அளிக்கப்பட்ட செய்திக்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அதை நான் சரியாக செய்யவில்லை. ஆயினும் கர்த்தாவே, அதை ஜனங்களின் பார்வைக்கு நீர் சரிபடுத்தி, அது எதற்காக அளிக்கப்பட்டது என்பதை அவர்கள் காணவும் அறிந்து கொள்ளவும் அருள் புரியும். கர்த்தாவே, அதிலிருந்து மகிமையை நீர் எடுத்துக் கொள்ளும். எது இல்லாமற் போனாலும், நாங்கள் தேவனுடைய வார்த்தை என்னும் அப்பத்தினால் பிழைக்கவேண்டுமென்றும், அது தேவனிடமிருந்து அவருடைய பிள்ளைகளுக்காக மாத்திரம் வடிகட்டப்பட்டு வந்துள்ளது என்றும் நாங்கள் புரிந்து கொள்ளும்படி செய்யும். இது பிரித்தெடுக்கப்பட்ட சபை. இது வேறு யாருக்காகவும் அல்ல. சிவப்பு கிடாரியின் தீட்டு கழிக்கப்பட்ட ஜலம் இஸ்ரவேல் சபையாருக்கு மாத்திரமே உரியது போன்று. இதுவும் உம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மாத்திரமே. எனவே பிதாவே, இந்த அப்பம் ஆடுகளுக்கு மாத்திரமே, பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளு- க்கு போடுகிறது நல்லதல்ல.'' என்றார் இயேசு. ஆனால் அந்த ஸ்திரி, ''ஆம் ஆண்டவரே. அது உண்மை தான். நான் துணிக்கைகளைப் பொறுக்கிக் கொள்ள சித்தமாயிருக்கிறேன்,'' என்று பதிலுரைத்தாள். கர்த்தாவே, இன்றிரவு நாங்களும் அதே விதமான உணர்ச்சியை பெற்றிருக்கிறோம். பிதாவே, உம்மால் எங்களுக்குத் தரக்கூடியவை அனைத்தும் எங்களுக்கு வேண்டும். ஏனெனில் "நாங்கள் அதிகமாக உமக்காக பசி தாகம் கொண்டவர்களாய் இருக்கிறோம்.'' 203. எங்கள் பசி தீரவும் எங்கள் விருப்பங்கள் தெரியப்படுத்தப்படவும் அருள் புரியும். ஏனெனில் பிதாவே. நாங்கள் நீதிமானின் விருப்பத்தைப் பெற்றிருக்க விரும்புகிறோம். நீதிமான், இயேசுகிறிஸ்துவே. அவர், பிதாவின் சித்தத்தையே செய்யவிரும்பினார். அது வார்த்தை. பிதாவே, அதை எங்களுக்கு அருள்வீராக. அவருடைய நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். நாம் "இயேசுவின் நாமத்தை உங்களுடன் கொண்டு செல்லுங்கள்" என்னும் கூட்டத்தை முடிக்கும் பாடலைப்பாடும் போது எழுந்து நிற்போம். 204. இன்றிரவு இச்செய்தி சென்ற இடங்களில் உள்ளவர்களே, நாம் ஜெபத்-துடன் கூட்டத்தை முடிக்கும் போது, தேவன் உங்களோடு கூட இருப்பாராக. அங்கு உள்ள நீங்கள் ஒவ்வொருவரும். இச்செய்தியை அளித்தது எனக்கு எவ்வளவாக மகிழ்ச்சியளித்ததோ, அவ்வளவாக அதைக் கேட்டு நீங்கள் மகிழ்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். தேவன் தாமே அதை உங்கள் இருதயத்தில் பதித்து, அதற்கு சரியான அர்த்தம் உரைப்பார் என நம்புகிறேன். 205. இங்கு உறுமால்களை வைத்துள்ள இக்கூட்டத்தில் உள்ளவர்களே, நான் அவைகள் மேல் என் கைகளை வைத்துவிட்டேன். உங்கள் ஒவ்வொருரையும் தேவன் சுகமாக்க வேண்டுமென்றும். நமது மத்தியில் வியாதியஸ்தர் ஒருவர் கூட இருக்கக் கூடாதென்றும் ஜெபிக்கிறேன். நமது தேவன் ஜெபத்துக்கு எப்படி உத்தரவு அருளுகின்றார் என்று பாருங்கள். 206. நாம் ஒன்று கூடியிருக்கும் போது, என் நாமம் தரிக்கப்பட்ட ஜனங்கள் ஒன்றுகூடி ஜெபம் பண்ணினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு..." (2.நாளா.7:14). அவர் அவ்வாறு செய்வதாக வாக்கருளியுள்ளார். 207. நாம் பிரிந்திருப்பவர்கள் அல்ல, நாம் ஒரே நபர். நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாக இருக்கிறோம். ஒவ்வொருவரும் மற்றவருக்காக ஜெபம் செய்யுங்கள். நான் உங்களுக்காக ஜெபம் செய்கிறது போல, நீங்களும் எனக்காக ஜெபம் செய்யுங்கள். நாம் மறுபடியும் சந்திக்கும் வரைக்கும் தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. 208. நீங்கள் தொடர்ந்து வருவீர்களென நம்புகிறேன். அருகாமையிலுள்ளவர்கள் இந்த கூடாரத்துக்கு வந்து நமது நல்ல போதகர் சகோ,நெவிலை சந்தியுங்கள். அவர் உங்களுக்கு நன்மை செய்வார். சகோ.மானும் இக் கூடாரத்தில் உள்ள அருமையான மக்களும். 209. நீங்கள் சகோ.ஜீனியர் ஜாக்ஸனுக்கு அருகில் இருக்க நேர்ந்தால் அல்லது நியூயார்க், கூட்டங்கள் நடக்கும் வெவ்வேறு இடங்களில், அரிசோனா, கலிபோர்னியா அருகில் இருப்பீர்களானால். அந்த சபைகளுக்குச் செல்லுங்கள். நீங்கள் மறுபடியுமாக இங்கு வரவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் கர்த்தராகிய இயேசுவை இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள போதகர் உங்களுக்கு உதவி செய்வார். 210, தேவன், உங்களை ஆசிர்வதிப்பாராக. இப்பொழுது நாம் ''இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல்'' என்னும் பாடலைப் பாடுவோம். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரமும் துக்கமும் கொண்ட பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலையும் அளிக்கும்........... கொண்டு (... சகோ.ஜான் வாருங்கள்...) செல். விலையுயர்ந்த நாமம்..... (விலையுயர்ந்த நாமம்), ஓ. என்ன இனிமை...!.... (ஓ என்ன இனிமை!) பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ. என்ன இனிமை பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். 211. இன்றிரவு சபையோரை சுற்றும் முற்றும் பார்க்கும் போது, பின்னால் சகோ.எசில்-பீலர், சகோ.பாமர், இன்னும் அநேகர், சகோ.ஜே.டி, மற்றும் அநேக போதகர்கள் நின்று கொண்டிருக்க காண்கிறேன். அவர்கள் எல்லாருடைய பெயரையும் கூப்பிட என்னால் இயலாது. அவர்கள் ஒவ்வொருவரையும் இங்கு அழைத்து. கூட்டத்தை முடிக்கக் கூறவோ அல்லது வேறெதாவது ஓன்றைச் செய்யக் கூறவோ என்னால் முடிந்தால் நலமாய் இருக்கும். உங்களுக்குப் புரிகிறது, இல்லையா-? உங்களுக்கு கிறிஸ்தவ இருதயம் உள்ளது என்றும் நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும் நானறிவேன். நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரே நபராய் இருக்கிறோம். 212. சகோ.மார்டின் ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்கும் முன்பு, அடுத்த சரணத்தை ஞாபகப்படுத்திக்கொள்வோம். நான் விரும்புகிறேன். இது சகோ. எர்ல் மார்டின். அவர் ஆர்கன்ஸாஸை சேர்ந்தவரென்று நினைக்கிறேன். இல்லை மிசெளரியைச் சேர்ந்தவர். அவர் ஆர்கன்ஸாஸ் மிசெளரி எல்லையில் வசிக்கிறார். அவர்களுக்கு அங்கே ஒரு சபையுள்ளது. 213, இந்த சகோதரரை நான் கவனித்தேன், அவருடைய பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. ''ப்ரூயர்.'' அவர் இன்று காலை இங்கிருந்தார், இன்றிரவும் அவர் வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆம், அவர் அங்கு நின்று கொண்டு இருப்பதைக் காண்கிறேன் - சகோ.ப்ரூயர். அவர்களுடைய சபைகளை நான் வந்து பிரதிஷ்டை செய்வேனென்று எத்தனையோ முறை வாக்களித்தேன். என்றாவது ஒரு நாள் கர்த்தருடைய உதவியைக் கொண்டு நான் அங்கு செல்வேன். இப்பொழுது அடுத்த சரணத்தை பாடலாம். இயேசுவின் நாமத்தில் முழங்கால்களை முடக்கி அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமது பயணம் முடிவடையும் போது பரலோகத்தில் அவரை ராஜாதிராஜாவாக முடிசூட்டுவோம். ....இப்பொழுது நாம் பாடுவோம்:..... இயேசுவின் நாமத்தில் முழங்கால்களை முடக்கி அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமது பயணம் முடிவடையும் போது பரலோகத்தில் அவரை ராஜாதிராஜாவாக முடிசூட்டுவோம். விலையுயர்ந்த நாமம்... (விலையுயர்ந்த நாமம்), ஓ.. என்ன இனிமை!... (ஓ என்ன இனிமை-!) பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை-! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் ஓ இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக (இப்பொழுது கவனியுங்கள்-!) உங்களைச் சுற்றிலும் சோதனைகள் சூழும் போது (நீங்கள் என்ன செய்ய வேண்டும்-?) அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரியுங்கள், விலையுயர்ந்த நாமம். ஓ என்ன இனிமை-! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை-! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் நாம் தலைவணங்குவோம். ஓ விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம் (அதில் ஞானஸ்நானம் பெற்று, அதில் ஜெபம் செய்தல்) 'ஓ, என்ன இனிமை! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் .....சகோ. மார்டின்.....!